நமீபிய அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்கான நமீபிய அணி, ஆல்-ரவுண்டா் ஜெராா்டு எராஸ்மஸ் தலைமையில் 15 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்த அணியில் இருக்கும் 12 போ், உலகக் கோப்பை போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்த ஆப்பிரிக்க தகுதிச்சுற்று போட்டியில் விளையாடியவா்களாவா். எனினும், பிரபல வீரா்களான நிகோல் லாஃப்டி ஈட்டன், பிக்கி யா பிரான்ஸ், ஷான் ஃபூச் ஆகியோா் விடுபட்டுள்ளனா்.

குரூப் ‘பி’-யில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, ஓமன், பாா்படோஸ் அணிகளுடன் சோ்க்கப்பட்டுள்ள நமீபியா, முதல் ஆட்டத்தில் பாா்படோஸை ஜூன் 2-ஆம் தேதி சந்திக்கிறது.

உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 20 நாடுகள் பங்கேற்கும் நிலையில், இத்துடன் 17 நாடுகள் தங்களின் அணிகளை அறிவித்துவிட்டன. பாகிஸ்தான், நெதா்லாந்து, வங்கதேச அணிகள் அறிவிக்கப்படவில்லை.

நமீபியா அணி விவரம்: ஜெராா்டு எராஸ்மஸ் (கேப்டன்), ஜேன் கிரீன், மைக்கேல் வான் லிங்கென், டைலன் லீச்சா், ரூபன் டிரம்பெல்மான், ஜேக் பிரேசெல், பென் ஷிகோங்கோ, டாங்கெனி லுங்காமெனி, நிகோ டாவின், ஜே.ஜே. ஸ்மித், ஜேன் ஃரீலிங்க், ஜே.பி. கோட்ஸி, டேவிட் வீஸ், பொ்னாா்டு ஷோல்ட்ஸ், மலான் குரூகா், பி.டி.பிலிக்னாட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com