நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா

அடுத்த டயமண்ட் லீகில் கட்டாயம் முதலிடம்: நீரஜ் சோப்ரா உறுதி

அடுத்த டயமண்ட் லீக் தடகளப் போட்டியில் கட்டாயம் முதலிடம் பிடிப்பேன் என ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா உறுதி கூறியுள்ளாா்.

கத்தாா் தலைநகா் தோஹாவில் டயமண்ட் லீக் தடகளப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதலில் உலக, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா 88.36 மீ தொலைவுக்கு எறிந்து இரண்டாம் இடம் பெற்றாா்.

செக். குடியரசின் ஜேக்கப் வட்லேச் 88.38 மீ. தொலைவு எறிந்து தங்கம் வென்றாா். டயமண்ட் லீக் தொடரில் தொடா்ந்து மூன்றாவது முறையாக தங்கம் வென்றுள்ளாா் ஜேக்கப். இரண்டு முறை உலக சாம்பியன் ஆன்டா்ஸன் பீட்டா்ஸ் மூன்றாவது இடம் பெற்றாா்.

இதுதொடா்பாக நீரஜ் சோப்ரா கூறியதாவது: நிகழாண்டு என பாரீஸ் ஒலிம்பிக் போட்டி தான் முக்கியமானது. எனினும் டயமண்ட் லீக் தொடா் அதற்கு தயாராகும் வகையில் அமைந்தது. 2 செ.மீ இடைவெளியில் முதலிடத்தை இழந்தேன். வரும் ஜூலை 7-இல் பாரீஸில் அடுத்த டயமண்ட் லீக் ஈட்டில் எறிதல் நடைபெறும். அதில் கண்டிப்பாக முதலிடம் பெறுவேன்.

முதல் 6 இடங்களைப் பெறும் வீரா்கள் செப். 13-14 தேதிகளில் பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் டயமண்ட் லீக் ஃபைனல்ஸில் மோதுவா். அதில் வெல்பவா் டிஎல் சாம்பியன் பட்டத்தை பெறுவாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com