செய்திகள் சில வரிகளில்

வென்றாலும் சரி, தோற்றாலும் சரி நாங்கள் ஒன்றாகவே செயல்படுகிறோம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை கேப்டன் நிதிஷ் ராணா கூறியுள்ளார்.
நிதீஷ் ராணா
நிதீஷ் ராணாபடம் | ஐபிஎல்

வென்றாலும் சரி, தோற்றாலும் சரி நாங்கள் ஒன்றாகவே செயல்படுகிறோம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை கேப்டன் நிதிஷ் ராணா கூறியுள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டுக்கு பின் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளாக அணியில் ஒருங்கிணைப்பு இல்லாத நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது ஏற்றத் தாழ்வுகளில் இணைந்தே செயல்படுகிறோம் என நிதிஷ் ராணா கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்ற நிலையில் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணி ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவாளர்களுடன் வெற்றியை கொண்டாடியது. கடந்த வாரம் 36-ஆவது முறையாக ஸ்பானிஷ் சாம்பியன் பட்டத்தை ரியல் மாட்ரிட் வென்றிருந்தது. மேலும் பயர்ன் முனிச்சை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன்ஸ் லீக் இறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது.

புது தில்லியில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் இரண்டாவது துப்பாக்கி சுடுதல் தேர்வுப் போட்டியில் 25 மீ. பிஸ்டல் பிரிவில் ஈஷா சிங்கும், ஆடவர் 25 மீ ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் அனிஷ் பன்வாலாவாவும் வெற்றி பெற்றுள்ளனர். மானு பாக்கர் இரண்டாவது இடத்தைப் பெற்றார். விஜயவீர் சித்து ஆடவர் பிரிவில் இரண்டாம் இடம் பெற்றார். 10 வீரர்கள் நான்காவது மற்றும்

இறுதிச் சுற்றில் மோதுகின்றனர்.

ஐபிஎல் விதிகளை மீறி செயல்பட்டதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெüலர் ரமண்தீப் சிங்குக்கு ஆட ஊதியத்தில் 20 சதவீதத்தை அபராதமாக ஐபிஎல் நிர்வாகம் விதித்துள்ளது. சனிக்கிழமை மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் விதிகளை ரமண்தீப் சிங் மீறினார் என கூறப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் சலீமா டைட் கூறியுள்ளார். கடந்த மாதம் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார் சலீமா. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஹாக்கி தொடரை 4-2 என கைப்பற்றியது இந்தியா. எஃப்ஐஎச் ஐரோப்பிய பிரிவு புரோ ஹாக்கி லீக் போட்டிகளுக்கு இத்தொடர் மிகவும் உதவியாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மே 22-முதல் தொடங்கும் புரோ ஹாக்கி லீக் தொடரில் ஆர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம், கிரேட் பிரிட்டன், ஜெர்மனியுடன் ஆடுகிறது இந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com