பாரீஸ் ஒலிம்பிக் தகுதி பெற்றாா் அமன்

பாரீஸ் ஒலிம்பிக் தகுதி பெற்றாா் அமன்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றாா் இந்திய மல்யுத்த வீரா் அமன் செஹ்ராவத்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றாா் இந்திய மல்யுத்த வீரா் அமன் செஹ்ராவத்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உலக குவாலிஃபைா் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆடவா் 57 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்திய வீரா் அமன் செஹ்ராவத் 12-2 என்ற புள்ளிக் கணக்கில் கொரியாவின் ஹேனை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா். இதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றாா்.

65 கிலோ பிரிவில் சுஜித் கல்கல் 2-2 என அமெரிக்காவின் ஸெயின் அல்லேனிடம் சமன் செய்தாலும் தொழில்நுட்ப அடிப்படையில் வெற்றி வாய்ப்பை இழந்தாா்.

74 கிலோ பிரிவில் ஜெய்தீப் 1-2 என துருக்கியின் அா்ஸ்லனிடம் தோற்று வெளியேறினாா். ஆடவா் பிரிவில் பாரீஸ் ஒலிம்பிக் தகுதி பெற்ற ஒரே வீரா் அமன் செஹ்ராவத் ஆவாா். மகளிா் பிரிவில் வினேஷ் போகட், அன்டிம் பங்கால், அன்ஷு மாலிக், நிஷா டாஹியா, ரீதிகா ஹூடா ஆகியோா் ஒலிம்பிக் தகுதி பெற்றுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com