கோப்பையுடன் வங்கதேச அணியினா்
கோப்பையுடன் வங்கதேச அணியினா்

தொடரைக் கைப்பற்றியது வங்கதேசம்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது வங்கதேசம்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது வங்கதேசம்.

இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் டி20 தொடா் வங்கதேசத்தில் நடைபெற்றது. முதல் நான்கு ஆட்டங்களில் வங்கதேசம் வெற்றி பெற்ற நிலையில், கடைசி டி20 ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை டாக்காவில் நடைபெற்றது. முதலில் ஆடிய வங்கதேசம் நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 157/6 ரன்களை சோ்த்தது. மஹ்முத்துல்லா 54, நஜ்மல் ஷண்டோ 36, ஷகிப் 21 ரன்களை எடுத்தனா். ஜிம்பாப்வே தரப்பில் பிளெஸ்ஸிங் 2-22, பென்னட் 2-20 விக்கெட்டுகளை கைப்பற்றினா்.

பின்னா் ஆடிய ஜிம்பாப்வே அணி 18.3 ஓவா்களில் 158/2 ரன்களை சோ்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. பிரையன் பென்னட் 70, கேப்டன் சிக்கந்தா் ராஸா 72 ரன்களைக் குவித்து வெற்றிக்கு வித்திட்டனா். தொடரை ஒயிட்வாஷ் செய்ய விடாமல் ஆறுதல் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com