சிட்சிபாஸ், மெத்வதேவ், சபலென்கா, கௌஃப் முன்னேற்றம்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்டெஃப்பனோஸ் சிட்சிபாஸ், டேனில் மெத்வதேவ், மகளிர் பிரிவில் சபலென்கா, கோகோ கௌஃப் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
சிட்சிபாஸ், மெத்வதேவ், சபலென்கா, கௌஃப் முன்னேற்றம்
dinmani online

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்டெஃப்பனோஸ் சிட்சிபாஸ், டேனில் மெத்வதேவ், மகளிர் பிரிவில் சபலென்கா, கோகோ கௌஃப் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆன்ட்ரெ ருப்லேவ் 5-7, 6-4, 7-5 என ஜிரெüனையும், போர்ஜஸ் 4-6, 7-6, 7-6 என பாஸரோவையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். சிட்சிபாஸ் 6-7, 6-4, 6-4 என ஸ்ட்ரஃப்பையும், மெத்வதேவ் 7-5, 6-4 என டிராப்பரையும் வீழ்த்தினர்.

ஆகர் அலியாசைம் 6-1, 7-6 என வேன் டி ஸôன்ட்ஸ்ல்பை வீழ்த்தினார்.

கௌஃப், சபலென்கா: அமெரிக்க வீராங்கனை கோகோ கௌஃப் 6-1, 0-6. 6-3 என கிறிஸ்டியனையும், மடிஸன் கீய்ஸ் 6-4, 4-6, 6-3 என ஹடாட் மலாவையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். ரவுண்ட் 32 சுற்றில் முன்னணி வீராங்கனை அர்யனா சபலென்கா 6-4, 6-2 என யஸ்ட்ரெம்ஸ்காவையும், மரியா ஸக்காரி 7-6, 6-0 என கலின்னினாவையும், பெகு 6-2, 6-0 என மெர்ட்டென்ûஸயும் வீழ்த்தினர். மற்றொரு ஆட்டத்தில் ஸ்ரம்கோவா 6-4, 4-6, 6-4 என சோஃபியா கெனினை வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com