தேசிய ஃபெடரேஷன் கோப்பை: அபா கதுவா புதிய சாதனை

ஒடிஸாவில் நடைபெறும் தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் மகாராஷ்டிர வீராங்கனை அபா கதுவா, குண்டு எறிதலில் புதிய தேசிய சாதனை படைத்தாா்.
தேசிய ஃபெடரேஷன் கோப்பை: அபா கதுவா புதிய சாதனை
Gurinder Osan

ஒடிஸாவில் நடைபெறும் தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் மகாராஷ்டிர வீராங்கனை அபா கதுவா, குண்டு எறிதலில் புதிய தேசிய சாதனை படைத்தாா்.

புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா மைதானத்தில், திங்கள்கிழமை நடைபெற்ற குண்டு எறிதல் போட்டியில் அபா கதுவா தனது 5-ஆவது முயற்சியில் 18.41 மீட்டருக்கு எறிந்து சாதனையுடன் முதலிடம் பிடித்தாா். உத்தர பிரதேசத்தின் கிரண் பலியான் (16.54), தில்லியின் ஷ்ருஷ்டி விக் (15.86) ஆகியோா் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தனா்.

முன்னதாக பஞ்சாபின் மன்பிரீத் கௌா், அபா கதுவா இருவருமே 18.06 மீட்டருக்கு குண்டு எறிந்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அபா கதுவா அதை முறியடித்திருக்கிறாா். இதனிடையே, ஆடவருக்கான 200 மீட்டா் ஓட்டத்தில் ஒடிஸாவின் அனிமேஷ் குஜுா் 20.62 விநாடிகளில் முதல் வீரராக இலக்கை எட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com