வங்கதேச அணி அறிவிப்பு

வங்கதேச அணி அறிவிப்பு

டாக்கா: டி20 உலகக் கோப்பை போட்டிக்கான வங்கதேச அணி நஜ்முல் ஹுசைன் ஷான்டோ தலைமையில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

காயத்துக்காக சிகிச்சை பெற்றுவரும் பெளலர் தஸ்கின் அகமது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ஜிம்பாப்வேயுடனான தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட அவர், அந்தத் தொடரில் காயம் கண்டார். தற்போது அவ்வளவாக ஃபார்மில் இல்லாத லிட்டன் தாஸ் உள்பட, அனுபவ வீரர்கள் அனைவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குரூப் "டி'-யில் தென்னாப்பிரிக்கா, இலங்கை, நேபாளம், நெதர்லாந்து அணிகளுடன் சேர்க்கப்பட்டுள்ள வங்கதேசம், முதல் ஆட்டத்தில் இலங்கையுடன் ஜூன் 7-ஆம் தேதி மோதுகிறது. வங்கதேசம் தொடர்ந்து 9-ஆவது முறையாக இந்தப் போட்டிக்கு வந்துள்ளது.

இந்த உலகக் கோப்பை போட்டியில் 20 நாடுகள் பங்கேற்கும் நிலையில், தற்போது பாகிஸ்தான் தவிர அனைத்து நாடுகளும் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன.

வங்கதேச அணி விவரம்

நஜ்முல் ஹுசைன் ஷான்டோ (கேப்டன்), தஸ்கின் அகமது (துணை கேப்டன்), லிட்டன் தாஸ், செளம்யா சர்கார், தன்ஸித் ஹசன், ஷகிப் அல் ஹசன், தெளஹித் ஹிருதய், மஹ்முதுல்லா, ஜாகர் அலி, தன்வீர் இஸ்லாம், மெஹெதி ஹசன், ரிஷத் ஹுசைன், முஸ்டாஃபிஸýர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், தன்ஸிம் ஹசன்.

பயணத்துக்கான ரிசர்வ் ஹசன் மஹ்முத், அஃபிஃப் ஹுசைன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com