மகளிர் கிரிக்கெட்: சென்னையில் இந்தியா - தெ.ஆப்பிரிக்கா ஆட்டங்கள்

மகளிர் கிரிக்கெட்: சென்னையில் இந்தியா - தெ.ஆப்பிரிக்கா ஆட்டங்கள்

புது தில்லி: இந்திய மகளிர் அணியுடனான கிரிக்கெட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்க மகளிர் அணி ஜூன் மாதம் இந்தியா வருகிறது.

இந்தப் பயணத்தின்போது 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர், ஒரு டெஸ்ட், 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன.

முதலில் ஒருநாள் தொடரின் ஆட்டங்கள், ஜூன் 16, 19, 23 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெறவுள்ளது. பின்னர் டெஸ்ட் ஆட்டம் ஜூன் 28 முதல் ஜூலை 1 வரை சென்னையில் நடைபெறுகிறது.

அடுத்து டி20 தொடரின் ஆட்டங்கள் ஜூலை 5, 7, 9 தேதிகளில் சென்னையிலேயே விளையாடப்படுகிறது. ஒருநாள் ஆட்டங்கள் நண்பகல் 1.30 மணிக்கும், டெஸ்ட் ஆட்டம் காலை 9 மணிக்கும், டி20 ஆட்டங்கள் இரவு 7 மணிக்கும் தொடங்கும்.

இதில் வெள்ளைப் பந்து தொடர்களானது, ஐசிசியின் எதிர்கால டூர் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு விளையாட வேண்டியதாகும்.

அப்போது ஆடவருக்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றதால், அந்தத் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடைபெறுகின்றன.

மகளிர் கிரிக்கெட்டில் டெஸ்ட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தற்போது இதில் ஒரு டெஸ்ட் ஆட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com