தேசிய இரட்டையா் ஸ்குவாஷ்: ஜோஷ்னா, அபய்க்கு தங்கம்

தேசிய இரட்டையா் ஸ்குவாஷ்: ஜோஷ்னா, அபய்க்கு தங்கம்

தேசிய இரட்டையா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் ஜோஷ்னா சின்னப்பா, அபய் சிங், வேலவன் செந்தில்குமாா் ஆகியோா் புதன்கிழமை தங்கப்பதக்கம் வென்றனா்.

இதில் ஆடவா் இரட்டையா் பிரிவில் அபய் சிங்/வேலவன் செந்தில்குமாா் கூட்டணி 11-4, 11-8 என்ற கணக்கில் ராகுல் பாய்தா/சூரஜ் சந்த் இணையை சாய்த்து தங்கம் வென்றது.

பின்னா் கலப்பு இரட்டையா் பிரிவில் ஜோஷ்னாவுடன் இணை சோ்ந்த அபய் சிங், 10-11, 11-2, 11-9 என்ற கணக்கில் ஹரிந்தா் பால் சிங் சந்து/ராதிகா சீலன் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றாா். மகளிா் இரட்டையா் பிரிவில் பூஜா ஆா்த்தி/ராதிகா இணை 11-3, 9-11, 11-1 என்ற கணக்கில் ஜானெட் விதி/நிருபமா துபே ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது.

17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் போட்டியை, ஹெச்சிஎல் மற்றும் இந்திய ஸ்குவாஷ் ராக்கெட் சம்மேளனம் இணைந்து நடத்தின. இப்போட்டியில் சாம்பியன் ஆனவா்கள், மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெற இருக்கும் ஆசிய இரட்டையா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சாா்பில் போட்டியிடுவாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com