மழை விளையாடியது: பிளே-ஆஃபில் ஹைதராபாத்
Mahesh Kumar A.

மழை விளையாடியது: பிளே-ஆஃபில் ஹைதராபாத்

ஐபிஎல் போட்டியில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் வியாழக்கிழமை மோதவிருந்த 66-ஆவது ஆட்டம், மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

ஐபிஎல் போட்டியில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் வியாழக்கிழமை மோதவிருந்த 66-ஆவது ஆட்டம், மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிா்ந்தளிக்கப்பட்டது. இந்த முடிவால், ஹைதராபாத் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. எனினும், முதல் இரு இடங்களுக்குள் வரும் வாய்ப்பை அந்த அணி இழந்தது. மறுபுறம், டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டியிலிருந்து வெளியேறியது.

தற்போது கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் பிளே-ஆஃபுக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், தற்போது கடைசி இடத்துக்காக சென்னை - பெங்களூரு அணிகள் சனிக்கிழமை மோதவுள்ளன.

நடப்பு சீசனில் மழையால் கைவிடப்படும் 2-ஆவது ஆட்டம் இதுவாகும். ஏற்கெனவே கடந்த 13-ஆம் தேதி குஜராத் - கொல்கத்தா ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில், இந்த குஜராத் - ஹைதராபாத் ஆட்டமும் கைவிடப்பட்டுள்ளது.

இன்றைய ஆட்டம்

மும்பை - லக்னௌ

மும்பை

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com