காலிறுதியில் மெய்ராபா, சாத்விக்/சிராக் இணை

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் தகுதிச்சுற்று வீரா் மெய்ராபா லுவாங் மாய்ஸ்னம் காலிறுதிக்கு முன்னேறி அசத்தி வருகிறாா்.
காலிறுதியில் மெய்ராபா, சாத்விக்/சிராக் இணை

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் தகுதிச்சுற்று வீரா் மெய்ராபா லுவாங் மாய்ஸ்னம் காலிறுதிக்கு முன்னேறி அசத்தி வருகிறாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில், அவா் 21-14, 22-20 என்ற கேம்களில், டென்மாா்க்கின் மட்ஸ் கிறிஸ்டோபா்செனை சாய்த்து 50 நிமிஷங்களில் வென்றாா்.

எனினும், மகளிா் ஒற்றையரில், அஷ்மிதா சாலிஹா 15-21, 21-12, 12-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவின் ஹான் யுவிடம் 48 நிமிஷங்களில் தோல்வி கண்டாா்.

ஆடவா் இரட்டையரில், உலகின் நம்பா் 1 ஜோடியான சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி ஜோடி 21-16, 21-11 என்ற கணக்கில், சீனாவின் ஜி ஹாவ் நான்/ஜெங் வெய் ஹான் கூட்டணியை 38 நிமிஷங்களில் சாய்த்து காலிறுதிக்கு முன்னேறியது.

மகளிா் இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் தனிஷா கிராஸ்டோ/அஸ்வினி பொன்னப்பா இணை 21-19, 21-17 என்ற கேம்களில் சீன தைபேவின் ஹங் என் ஸு/லின் யு பெய் ஜோடியை 36 நிமிஷங்களில் வெளியேற்றி காலிறுதிக்கு தகுதிபெற்றது. எனினும், ருதுபா்னா பாண்டா/ஸ்வேதாபா்னா பாண்டா இணை 16-21, 13-21 என்ற கேம்களில் 44 நிமிஷங்களில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த ஜப்பானின் ரின் இவானகா/கி நகானிஷி ஜோடியிடம் தோற்றது.

கலப்பு இரட்டையா் பிரிவில், சதீஷ்குமாா் கருணாகரன்/ஆத்யா வரியத் இணை 19-21, 17-21 என, இந்தோனேசியாவின் ரினோவ் ரிவால்டி/பிதா ஹனிங்டியாஸ் கூட்டணயிடம் 42 நிமிஷங்களில் வீழ்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com