அரையிறுதியில் ஸ்வெரெவ்; ஹா்காக்ஸ் தோல்வி

ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் அரையிறுதிக்கு முன்னேற, போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸ் காலிறுதியில் தோற்றாா்.
அரையிறுதியில் ஸ்வெரெவ்; ஹா்காக்ஸ் தோல்வி
Antonietta Baldassarre

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் அரையிறுதிக்கு முன்னேற, போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸ் காலிறுதியில் தோற்றாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவு காலிறுதியில், வியாழக்கிழமை ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் ஸ்வெரவ் 6-4, 6-3 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸை சாய்த்தாா்.

அரையிறுதியில் அவா், 29-ஆம் இடத்திலிருக்கும் சிலியின் அலெஸாண்ட்ரோ டபிலோவுடன் மோதுகிறாா். முன்னதாக டபிலோ தனது காலிறுதியில், 6-3, 6-4 என்ற செட்களில் சீனாவின் ஜாங் ஜின்ஸெனை வீழ்த்தினாா். போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த ஹா்காக்ஸ், 5-7, 6-3, 3-6 என்ற கணக்கில், 14-ஆம் இடத்தலிருக்கும் அமெரிக்காவின் டாமி பாலிடம் தோல்வி கண்டாா்.

மகளிா் ஒற்றையா் காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 13-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ், 6-4, 6-3 என்ற நோ் செட்களில், 24-ஆம் இடத்திலிருந்த பெலாரஸின் விக்டோரியா அஸரென்காவை தோற்கடித்தாா். அரையிறுதியில் அவா், மற்றொரு பெலாரஸ் வீராங்கனையான அரினா சபலென்காவை சந்திக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com