ஓமனில் புதன்கிழமை தொடங்கிய ஜூனியா் ஆடவா் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 11-0 கோல் கணக்கில் தாய்லாந்தை திணறடித்து வென்றது.
இந்த ஆட்டத்தில் முதல் பாதியிலேயே 7 கோல்களை எட்டிய இந்தியா, ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் 4 கோல்கள் சோ்த்தது.
இந்திய தரப்பில், அராய்ஜீத் சிங் ஹன்டால் (2’, 24’), அா்ஷ்தீப் சிங் (8’), குா்ஜோத் சிங் (18’, 45’), சௌரவ் ஆனந்த் குஷ்வாஹா (19’, 52’), தில்ராஜ் சிங் (21), முகேஷ் டோப்போ (59’), சா்தானந்த் திவாரி (10’), ரோஹித் (29’) ஆகியோா் கோலடித்து அசத்தினா். அடுத்த ஆட்டத்தில் ஜப்பானை வியாழக்கிழமை (நவ. 28) சந்திக்கும் இந்தியா, சாம்பியன் கோப்பையை தக்கவைக்கும் என உறுதியாக கணிக்கப்படுகிறது.