புரோ கபடி லீக்: புணேயில்
11 பிளே ஆஃப், இறுதி ஆட்டம்

புரோ கபடி லீக்: புணேயில் 11 பிளே ஆஃப், இறுதி ஆட்டம்

புரோ கபடி லீக் தொடரின் இறுதிக் கட்ட ஆட்டங்கள் புணேயில் நடைபெறவுள்ள நிலையில், 11 பிளே ஆஃப் ஆட்டங்கள் மற்றும் இறுதி ஆட்டமும் டிச. 26 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
Published on

புரோ கபடி லீக் தொடரின் இறுதிக் கட்ட ஆட்டங்கள் புணேயில் நடைபெறவுள்ள நிலையில், 11 பிளே ஆஃப் ஆட்டங்கள் மற்றும் இறுதி ஆட்டமும் டிச. 26 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

புரோ கபடி லீக் தொடரின் முதல் கட்ட ஆட்டங்கள் ஹைதராபாதிலும், இரண்டாம் கட்ட ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்றன.

இரண்டாம் கட்ட முடிந்த நிலையில் இறுதி கட்ட ஆட்டங்கள் புணேயில் நடைபெறவுள்ளன. லீக் பிரிவில் முதலிரண்டு அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். 3,4, 5, 6-ஆவது இடங்களைப் பெறும் அணிகள் டிச. 26 எலிமினேட்டரில் ஆடும். மூன்றாவது அணி-6-ஆவது அணி எலிமினேட்டா் 1-இல் மோதும். 4 மற்றும் 5-ஆவது இட அணிகள் எலிமினேட்டா் 2-இல் மோதும்.

எலிமினேட்டா் 1 வின்னா்-முதலிடத்தில் உள்ள அணியுடனும், எலிமினேட்டா் 2 வின்னா்-இரண்டாமிடத்தில் உள்ள அணியுடனும் அரையிறுதியில் மோதும்.

புரோ கபடி லீக் 11-ஆவது சீசன் இறுதி ஆட்டம் டிச. 29-இல் நடைபெறும் என லீக் ஆணையா் அனுபம் கோஸ்வாமி தெரிவித்தாா்.

X