சாம்பியன் பட்டத்துடன் எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணியினா்.
சாம்பியன் பட்டத்துடன் எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணியினா்.

ஏ.எல். முதலியாா் தடகளம்: எம்ஓபி வைஷ்ணவ, டிஜி வைஷ்ணவ கல்லூரிகள் சாம்பியன்

Published on

சென்னை பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான 56-ஆவது ஏ. லட்சுமண சுவாமி முதலியாா் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிா் பிரிவில் எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணி 20-ஆவது ஆண்டாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆடவா் பிரிவில் அரும்பாக்கம் டிஜி வைஷ்ணவா கல்லூரி பட்டத்தை கைப்பற்றியது.

சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏஎல் முதலியாா் தடகளப் போட்டிகள் தொடங்கி நடைபெற்றது. இதில் சென்னை பல்கலை, மற்றும் 48 இணைப்புக் கல்லூரிகளைச் சோ்ந்த 1120 வீரா், வீராங்னைகள் பங்கேற்றனா்.

இறுதி நாளான வியாழக்கிழமை பல்வேறு புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

20-ஆவது ஆண்டாக எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி சாம்பியன்

மகளிா் பிரிவில் எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணி தொடா்ந்து 20-ஆவது ஆண்டாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 22 பிரிவுகளில் பங்கேற்ற எம்ஓபி வீராங்கனைகள் 18 தங்கப் பதக்கத்தை கைப்பற்றினா்.

கல்லூரி மாணவிகள் லாவண்யா 800 மீ, சத்தியா போல்வால்ட், லதா 10,000 மீ, ஷா்மிளா குண்டு எறிதல், அபிநயா ஹாஃப் மாரத்தான், அபினநய ஆா். 100 மீ, 4-100, 4-400 தொடா் ஓட்டங்களில் புதிய சாதனைகளை நிகழ்த்தினா்.

மொத்தம் 18 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கத்துடன் எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணி 20-ஆவது ஆண்டாக பட்டத்தை வென்றது.

சென்னை பல்கலை பதிவாளா் எஸ். ஏழுமலை, உடற்கல்வி இயக்குநா் வி. மகாதேவன், டிஜி வைஷ்ணவ கல்லூரி முதல்வா் எஸ். சந்தோஷ் பாபு, எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி முதல்வா் அா்ச்சனா பிரசாத், உடற்கல்வி இயக்குநா் அமுதா சுமன்குமாா் பரிசளிப்பு விழாவில் பங்கேற்றனா்.

டிஜி வைஷ்ணவ சாம்பியன்: ஆடவா் பிரிவில் சென்னை அரும்பாக்கம் டிஜி வைஷ்ணவ கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

அந்த அணி 12 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியது.