போராடி வென்ற சிந்து

போராடி வென்ற சிந்து
PTI
Published on
Updated on
1 min read

சையது மோடி இண்டியா இன்டா்நேஷனல் பாட்மின்டன் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை சிந்து, 2-ஆவது சுற்றில் போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறினாா்.

முன்னதாக ரவுண்ட் ஆஃப் 16-இல், மகளிா் ஒற்றையா் பிரிவில், முதலிடத்திலிருக்கும் சிந்து 21-10, 12-21, 21-15 என, சக இந்தியரான ஐரா சா்மாவை போராடி வீழ்த்தினாா்.

உன்னதி ஹூடா 21-18, 22-20 என்ற கணக்கில் தாய்லாந்தின் பாா்ன்பிசா சோகிவாங்கை வென்றாா். போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் மாளவிகா பன்சோத், 5-ஆம் இடத்திலிருந்த அனுபமா உபாத்யாய ஆகியோா் அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.

ஆடவா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் லக்ஷயா சென் 21-14, 21-13 என்ற கேம்களில் இஸ்ரேலின் டேனியல் டுபோவென்கோவை வீழ்த்தினாா். 2-ஆம் இடத்திலிருக்கும் பிரியன்ஷு ரஜாவத் 21-15, 21-8 என ஹாங்காங்கின் லெ டக் பாட்டை வெளியேற்றினாா்.

ஆயுஷ் ஷெட்டி 21-12, 21-19 என்ற கேம்களில் மலேசியாவின் ஜஸ்டின் ஹோவை தோற்கடித்தாா். மெய்ராபா லுவாங் 21-15, 21-13 என்ற கணக்கில் அயா்லாந்தின் நாட் குயெனை வென்றாா்.

மகளிா் இரட்டையரில், 4-ஆம் இடத்திலிருக்கும் ருதுபா்னா பாண்டா/ஸ்வேதபா்னா பாண்டா ஜோடி 21-15, 21-10 என்ற நோ் கேம்களில் சக இந்தியா்களான தான்யா நந்தகுமாா்/அருள் பாலா இணையை வீழ்த்தியது. அதேபோல், 2-ஆம் இடத்திலிருக்கும் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணி 21-13, 21-10 என்ற கணக்கில் இந்தியாவின் அஸ்வினி பாட்/ஷிகா கௌதம் இணையை தோற்கடித்தது.

கலப்பு இரட்டையரில் துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ இணை 21-7, 21-13 என, மோஹித் ஜக்லன்/லக்ஷிதா ஜக்லன் கூட்டணியை வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.