சென்னை - ஹைதராபாத் 
கோலின்றி டிரா

சென்னை - ஹைதராபாத் கோலின்றி டிரா

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில், சென்னையின் எஃப்சி - ஹைதராபாத் எஃப்சி அணிகள் செவ்வாய்க்கிழமை மோதிய 19-ஆவது ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.
Published on

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில், சென்னையின் எஃப்சி - ஹைதராபாத் எஃப்சி அணிகள் செவ்வாய்க்கிழமை மோதிய 19-ஆவது ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

ஹைதராபாதில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே ஒன்றுக்கொன்று விடாப்பிடியாக பலம் காட்டியதால், ஆட்டம் டிரா ஆனது. இரு அணிகளுக்கும் இது 3-ஆவது ஆட்டமாக இருக்க, இரண்டுக்குமே இது முதல் டிரா ஆகும். ஏற்கெனவே சென்னை ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடனும், ஹைதராபாத் 2 தோல்விகளுடனும் உள்ளன.

புள்ளிகள் பட்டியலில் சென்னை 4 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்திலும், ஹைதராபாத் 1 புள்ளியுடன் 12-ஆவது இடத்திலும் உள்ளன. போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில், மும்பை சிட்டி எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகள் மும்பையில் புதன்கிழமை மோதுகின்றன.

X
Dinamani
www.dinamani.com