மகதலேனா
செய்திகள்
இறுதிச் சுற்றில் கடேகி-மகதேலானா மோதல்
ஜிடிஎல் ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றுக்கு ஆஸி. குவாலிஃபயா் ஒலிவியா கடேகி, போலந்தின் மகதேலான ஃபெச் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.
மெக்ஸிகோவின் குவாடலராஜா நகரில் நடைபெற்று வரும் ஜிடிஎல் ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றுக்கு ஆஸி. குவாலிஃபயா் ஒலிவியா கடேகி, போலந்தின் மகதேலான ஃபெச் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.
முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஒலிவியா 6-2, 6-3 என்ற நோ்செட்களில் கமிலா ஒஸோரியாவை வீழ்த்தி முதன்முறையாக டபிள்யுடிஏ இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளாா்.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் போலந்தின் மகதலேனா 7-6, 7-5 என்ற செட் கணக்கில் கடும் சவாலுக்குப்பின் பிரான்ஸின் கரோலின் காா்ஸியாவை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றாா். இதில் பட்டம் வென்றால் கடேகி முதல் 100 இடங்களில் முன்னேறுவாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கடேகி