மோகன் பகானுக்கு முதல் வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில் மோகன் பகான் சூப்பர் ஜயன்ட்ஸ் 3-2 கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை திங்கள்கிழமை வென்றது.
கொ‌ட்டு‌ம் மû‌ழயி‌ல் கோலடி‌த்த மோக‌ன் பகா‌ன் வீர‌ர்.
கொ‌ட்டு‌ம் மû‌ழயி‌ல் கோலடி‌த்த மோக‌ன் பகா‌ன் வீர‌ர்.
Published on
Updated on
1 min read

கொல்கத்தா: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில் மோகன் பகான் சூப்பர் ஜயன்ட்ஸ் 3-2 கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை திங்கள்கிழமை வென்றது.

இரு அணிகளும் இத்துடன் 2-ஆவது ஆட்டத்தில் விளையாடியிருக்க, மோகன் பகானுக்கு இது முதல் வெற்றியாகும். நார்த்ஈஸ்ட் அணிக்கு இது முதல் தோல்வி.

கொல்கத்தாவிலுள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் நார்த்ஈஸ்ட் வீரர் முகமது அலி பெமாமர் 4-ஆவது நிமிஷத்தில் கோலடித்தார். அதற்கு பதிலடியாக மோகன் பகான் தரப்பில் தீபேந்து பிஸ்வாஸ் 10-ஆவது நிமிஷத்தில் ஸ்கோர் செய்தார்.

விடாப்பிடியாக நார்த்ஈஸ்ட் அணிக்காக அலாதின் அஜாரெ 24-ஆவது நிமிஷத்தில் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்த, முதல் பாதி நிறைவில் அந்த அணியின் கையே ஓங்கியிருந்தது. 2-ஆவது பாதியில் மோகன் பகான் ஆக்ரோஷம் காட்ட, அந்த அணிக்காக சுபாசிஷ் போஸ் 61-ஆவது நிமிஷத்தில் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.

எஞ்சிய நேரத்தில் வெற்றிக்கான கோலுக்காக இரு அணிகளும் தீவிரமாக முயற்சிக்க, மோகன் பகான் வீரர் ஜேசன் கம்மிங்ஸ் 87-ஆவது நிமிஷத்தில் கோலடித்து அணியை 3-2 என வெற்றி பெறச் செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com