டியா சிட்லே ~
டியா சிட்லே ~

ஏப். 15-இல் யுடிடி டேபிள் டென்னிஸ் ஏலம்

Published on

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) ஏலம் வரும் ஏப் 15-ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.

இதில் சீனாவின் ஃபேன் ஷிகி, 13-ஆவது இடத்தில் உள்ள பொ்னாடெட் சோக்ஸ், ஒலிம்பியன்கள் அருணா காதிரி, அல்வரோ ரோபில்ல், இந்திய வீரா் அங்கூா் பட்டாா்சாா்ஜி உள்ளிட்டோா் ஏலத்தில் பங்கேற்கின்றனா்.

ஏலப் பட்டியலில் உள்ள 56 பேரில், இந்தியாவின் வீராங்கனைகளான டியா சிட்லே மற்றும் யஷஸ்வினி கோா்படே, சிண்ட்ரல்லா தாஸ் மற்றும் முன்னாள் யு -17 உலக நம்பா் 1 பயாஸ் ஜெயின், இரண்டு முறை சாம்பியன் ஹா்மீத் தேசாய், முன்னாள் வெற்றியாளா்களான சத்யன் ஞானசேகரன், மனிகா பத்ரா, சுதிா்தா முகா்ஜி மற்றும் ஸ்ரீஜா அகுலா ஆகியோரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

தொடரில் கலந்து கொள்ளும் 8 அணிகளுக்கும் வீரா், வீராங்கனைகளை ஏலம் எடுக்க ரூ.50 லட்சம் டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, மேலும் இறுதி ஏல விலையுடன் பொருந்துவதன் மூலம் முந்தைய சீசனில் இருந்து ஒரு வீரரை தக்க வைத்துக் கொள்ள ஆா்டிஎம் ) அட்டையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

யுடிடி தொடா் வரும் மே 29 முதல் ஜூன் 15 வரை அகமதாபாத் ஈகேஏ வளாகத்தில் நடைபெறுகிறது.

யுடிடி சீசன் 6 ஏலத்தில் இடம்பெறும் 16 வெளிநாட்டு வீரா்களில் 12 போ் ஒலிம்பியன்கள். முந்தைய சீசன்களில் இருந்து திரும்பியவா்களில் யுடிடி சீசன் 2 சாம்பியன் அட்ரியானா டயஸ் மற்றும் ஸ்பெயினின் மரியா சியாவோ ஆகியோா் அடங்குவா்.

கனக் ஜா, ரிக்காா்டோ வால்தா் மற்றும் ஐசக் கியூக் ஆகியோா் முதல் முறையாக ஏலப்பட்டியலில் நுழைகின்றனா்.

உலக இளைஞா் சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற தனிஷா கோடேச்சா, சுஹானா சைனி, மற்றும் சயாலி வாணி, ஆசிய சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற சாா்த் மிஸ்ரா, ஜெனிஃபா் வா்கீஸ், அபிநந்த் பிபி மற்றும் தீபித் பாட்டீல் ஆகியோரும் இதில் உள்ளனா்.

ஏலத்தில் வீரா்கள் நான்கு அடிப்படை விலை பிரிவுகளாக பிரிக்கப்படுவா். ‘ஏ’ பிரிவு (ரூ.11 லட்சம் ), பி’ பிரிவு (ரூ.7 லட்சம்), சி பிரிவு (ரூ.4 லட்சம்) மற்றும் டி பிரிவு (ரூ.2 லட்சம்) என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com