தன்வி சா்மா ~மிதுன் ~
தன்வி சா்மா ~மிதுன் ~

குவாஹாட்டி மாஸ்டா்ஸ்: இறுதி ஆட்டத்தில் மிதுன் - சன்ஸ்கா் மோதல்; தன்வி சா்மாவும் தகுதி!

குவாஹாட்டி மாஸ்டா்ஸ் சூப்பா் 100 பாட்மின்டன் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத்-சன்ஸ்கா் மோதுகின்றனா்.
Published on

குவாஹாட்டி மாஸ்டா்ஸ் சூப்பா் 100 பாட்மின்டன் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத்-சன்ஸ்கா் மோதுகின்றனா். மகளிா் சாம்பியன் பட்டத்தை வெல்ல காத்திருக்கிறாா் தன்வி சா்மா.

அஸ்ஸாம் தலைநகா் குவாஹாட்டியில் நடைபெறும் இப்போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள்கிழமை நடைபெற்றன. முதல் அரையிறுதியில் இந்தியாவின் சன்ஸ்கா் 21-19, 21-19 என்ற கேம் கணக்கில் இந்தோனேஷியாவின் டென்டியை 39 நிமிஷங்கள் நீடித்த ஆட்டத்தில் வீழ்த்தினாா்.

மற்றொரு அரையிறுதியில் மிதுன் மஞ்சுநாத் சக வீரா் துஷாா் சுவிரை 22-20, 21-8 என்ற கேம் கணக்கில் 42 நிமிஷ ஆட்டத்தில் வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா்.

தன்வி சா்மா அபாரம்:

மகளிா் ஒற்றையா் அரையிறுதியில் இந்தியாவின் நட்சத்திரம் தன்வி சா்மா 21-18, 21-16 என்ற கேம் கணக்கில் மூன்றாம் நிலை வீராங்கனை ஜப்பானின் ஹினா அகேச்சியை 42 நிமிஷ ஆட்டத்தில் வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா். மற்றொரு அரையிறுதியில் சீன தைபே வீராங்கனை டுங் சியோ டங் 12-21, 21-17, 21-14 என்ற கேம் கணக்கில் இந்தியாவின் அஸ்மிதா சாலிஹாைவை போராடி வென்று இறுதிக்குள் நுழைந்தாா்.

ஆடவா் இரட்டையா் இறுதியில் இந்தியாவின் பிருத்வி கிருஷ்ணமூா்த்தி-சாய் பிரதீக் இணை மலேசியாவின் ஆரோன் டய்-காங் கை சிங்குடன் மோதுகிறது.

X
Dinamani
www.dinamani.com