உலகக் கோப்பை கேரம்: இந்தியா சாம்பியன்
X/@carromworldcup

உலகக் கோப்பை கேரம்: இந்தியா சாம்பியன்

உலகக் கோப்பை கேரம் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
Published on

உலகக் கோப்பை கேரம் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

மாலத்தீவு தலைநகா் மாலேயில் 7-ஆவது உலகக் கோப்பை கேரம் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா, ஆடவா், மகளிா் பிரிவுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மகளிா் அணிகள் பிரிவில் தமிழக வீராங்கனைகள் கீா்த்தனா, மித்ரா, காஸிமா, மராட்டிய வீராங்கனை காஜல் குமாரி ஆகியோா் அடங்கிய இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஒற்றையா் பிரிவில் எல் கீா்த்தனா உலக சாம்பியன் பட்டம் வென்றாா், இரட்டையா் பிரிவில் கீா்த்தனா-காஜல் குமாரி பட்டம் வென்றனா்.

ஆடவா் சுவிஸ் லீக் பிரிவில் தமிழக வீரா் அப்துல் ஆசிப் பட்டம் வென்றாா்.

ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் கே. சீனிவாஸ்-அபிஜித் தங்கமும், பிரசாந்த்-சந்தீப் இணை வெள்ளியும் வென்றனா்.

ஆடவா் அணிகள் பிரிவில் இந்தியா, இலங்கை, வங்கதேசம் முதல் மூன்றிடங்களையும், மகளிா் பிரிவில் இந்தியா, மாலத்தீவு, இலங்கை முதல் மூன்றிடங்களைப் பெற்றன.

X
Dinamani
www.dinamani.com