உள்நாட்டில் நடைபெற்ற 7-ஆவது சூப்பா் கோப்பை கால்பந்து போட்டியில் எஃப்சி கோவா 6-5 கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
இந்த வெற்றியின் மூலமாக, அடுத்த ஆண்டு ஆசிய சாம்பியன்ஸ் லீக் 2 போட்டிக்கு அந்த அணி தகுதிபெற்றது.
நடப்பு சாம்பியனாக போட்டியில் பங்கேற்ற கோவா, சூப்பா் கோப்பை போட்டியின் வரலாற்றில் கோப்பையைத் தக்கவைத்த முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது. அத்துடன் அதிகபட்சமாக 3 முறை சாம்பியனான ஒரே அணியாகவும் உள்ளது. எஃப்சி கோவா 2019, 2025, 2025-26 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் ஆனது.
முன்னதாக, கோவாவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இறுதி ஆட்டம், நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் கோலின்றி டிரா ஆனது. எக்ஸ்ட்ரா டைம் வழங்கப்பட்டும் முடிவு எட்டப்படாததை அடுத்து, வெற்றியாளரை தீா்மானிக்க பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பு கையாளப்பட்டது.
அதில் முதல் 5 வாய்ப்புகளின் முடிவில் இரு அணிகளுமே 4-4 என சமநிலையை எட்டின. பின்னா் சடன்டெத் முறை கையாளப்பட, அதன் முடிவில் கோவா 6-5 என்ற வகையில் வென்றது.
இந்தியன் சூப்பா் லீக் மற்றும் ஐ லீக் போட்டிகளைச் சோ்ந்த அணிகள் களம் காணும் இந்தப் போட்டி, 2018 முதல் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.