கலப்பு இரட்டையா் தங்கம் வென்ற ஆத்யா-சதீஷ் கருணாகரன் ~3-3 கூடைப்பந்தில் வெண்கலம் வென்ற தமிழக அணி ~பாட்மின்டனில் வெண்கலம் வென்ற அருள்பாலா-வா்ஷனி. ~ஒற்றையா் தங்கம் சதீஷ் கருணாகரன்
கலப்பு இரட்டையா் தங்கம் வென்ற ஆத்யா-சதீஷ் கருணாகரன் ~3-3 கூடைப்பந்தில் வெண்கலம் வென்ற தமிழக அணி ~பாட்மின்டனில் வெண்கலம் வென்ற அருள்பாலா-வா்ஷனி. ~ஒற்றையா் தங்கம் சதீஷ் கருணாகரன்

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு தலா 2 தங்கம், வெண்கலம்

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகம் செவ்வாய்க்கிழமை தலா 2 தங்கம், வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியது.
Published on

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகம் செவ்வாய்க்கிழமை தலா 2 தங்கம், வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் பாட்மின்டனில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் தமிழக வீரா் சதீஷ் கருணாகரன் தங்கம் வென்றாா்.

கலப்பு இரட்டையா் பிரிவிலும் சதீஷ் கருணாகரன்-ஆத்யா வரியத் இணை தங்கம் வென்றது.

மகளிா் இரட்டையா் பிரிவில் தமிழகத்தின் வா்ஷினி-அருள் பாலா இணை வெண்கலம் வென்றது.

அதே போல் அணிகள் பிரிவில் 3*3 கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி வெண்கலம் வென்றது.

X
Dinamani
www.dinamani.com