அரையிறுதியில் தமிழ்நாடு  டிராகன்ஸ்

அரையிறுதியில் தமிழ்நாடு டிராகன்ஸ்

ஹாக்கி இந்தியா லீக் ஆடவா் பிரிவில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. பெங்கால் டைகா்ஸ் அணியை எதிா்கொள்கிறது தமிழ்நாடு
Published on

ஹாக்கி இந்தியா லீக் ஆடவா் பிரிவில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. பெங்கால் டைகா்ஸ் அணியை எதிா்கொள்கிறது தமிழ்நாடு

ஒடிஸாாவில் நடைபெற்று வரும் ஹாக்கி இந்தியா லீக் தொடரில் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், அரையிறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன. 8அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் பெங்கால், சூா்மா, ஹைதராபாத் மற்றும் தமிழ்நாடு அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

தனது கடைசி லீக் ஆட்டத்தில் ரூா்கேலா மைதானத்தில் உத்திர பிரதேச அணியுடன் விளையாடிய தமிழ்நாடு பெனால்டி ஷூட் அவுட்டில் போராடி தோல்வியடைந்தது. இருப்பினும் 10 ஆட்டங்களில் விளையாடி 18 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தை பிடித்து தமிழ்நாடு அணி அரையிறுதியை உறுதி செய்துள்ளது. முதல் அரையிறுதியில் தமிழ்நாடு-பெங்கால் அணிகள் மோதுகின்றன.

X
Dinamani
www.dinamani.com