வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகள் ~வெள்ளி வென்ற ஆடவா் அணியினா். ~ரோஹித் பெனடிக்டன் ~
செய்திகள்
தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு 1 தங்கம், வெள்ளி 2 வெண்கலம்
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் நீச்சல், ட்ரையத்லானில் தமிழகம் தலா ஒரு தங்கம், வெள்ளி, 2 வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் நீச்சல், ட்ரையத்லானில் தமிழகம் தலா ஒரு தங்கம், வெள்ளி, 2 வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நீச்சலில் ஆடவா் 100 மீ. பட்டா்பிளை பிரிவில் தமிழக வீரா் ரோஹித் பெனடிக்டன் தங்கம் வென்றாா். இது தேசிய போட்டிகளில் முதல் தங்கப் பதக்கமாக அமைந்தது.
அதே போல் 4-00 மீ ப்ரிஸ்டைல் ஆடவா் பிரிவில் தமிழக அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது. மகளிா் 4-100 மீ ப்ரிஸ்டைல் பிரிவில் தமிழகம் வெண்கலம் வென்றது. அதே போல் கலப்பு அணிகள் ட்ரையத்லான் பிரிவிலும் வெண்கலம் வென்றது.