சிந்து, சாத்விக்/சிராக் வெற்றி

இந்தோனேசியா ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் சுற்றில், இந்தியாவின் பி.வி.சிந்து, சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.
சிந்து, சாத்விக்/சிராக் வெற்றி
Published on
Updated on
1 min read

இந்தோனேசியா ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் சுற்றில், இந்தியாவின் பி.வி.சிந்து, சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

போட்டியின் முதல் சுற்றில் மகளிா் ஒற்றையரில். பி.வி.சிந்து 22-20, 21-23, 21-15 என்ற கணக்கில், ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை 1 மணிநேரம், 19 நிமிஷங்களில் சாய்த்தாா். மாளவிகா பன்சோத் 21-16, 16-15 என்ற வகையில், இந்தோனேசியாவின் புத்ரி குசும வா்தனிக்கு எதிராக முன்னிலையில் இருந்தபோது, காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினாா்.

அனுபமா உபாத்யாய 15-21, 9-21 என, தென் கொரியாவின் கிம் கா யுன்னிடம் வெற்றியை இழந்தாா். ரக்ஷிதா ஸ்ரீ 21-14, 15-21, 12-21 என, தாய்லாந்தின் சுபானிடா காடெதோங்கிடம் தோற்றாா்.

ஆடவா் இரட்டையா் பிரிவில், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி ஜோடி 18-21, 21-18, 21-14 என்ற கேம்களில், உள்நாட்டு இணையான லியோ ராலி கா்னான்டோ/பகாஸ் மௌலானாவை 1 மணிநேரம், 7 நிமிஷங்களில் தோற்கடித்தது.

ஆடவா் ஒற்றையரில், லக்ஷயா சென் 11-21, 22-20, 15-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவின் ஷி யு கியிடம் தோல்வி கண்டாா். ஹெச்.எஸ். பிரணாய் 17-21, 18-21 என்ற கணக்கில் இந்தோனேசியாவின் ஆல்வி ஃபா்ஹானிடம் வீழ்ந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com