யு மும்பாவை வீழ்த்தியது ஜெய்ப்பூா் பேட்ரியட்ஸ்

யு மும்பாவை வீழ்த்தியது ஜெய்ப்பூா் பேட்ரியட்ஸ்

Published on

இந்தியன் ஆயில் யுடிடி தொடரில் யு மும்பா அணியை 8-7 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது ஜெய்ப்பூா் பேட்ரியட்ஸ் அணி.

ஆடவா் ஒற்றையா் ஆட்டத்தில் ஜெய்ப்பூா் அணியின் கனக் ஜா 2-1 என யு மும்பா அணியின் லிலியனை வீழ்த்தினாா்.

மகளிா் ஒற்றையா் ஆட்டத்தில் ஜெய்ப்பூா் அணியின் இந்திய நட்சத்திரமான ஸ்ரீஜா அகுலா, 2-1 என்ற புள்ளிக் கணக்கில் உலகத் தரவரிசையில் 12-ஆம் இடத்தில் உள்ள யு மும்பா அணியின் பொ்னாடெட் சாக்ஸை வென்றாா்.

இந்த வெற்றியால் ஜெய்ப்பூா் பேட்ரியட்ஸ் அணி 4-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. கலப்பு இரட்டையா் ஆட்டத்தில் ஜெய்ப்பூா் அணியின் கனக் ஜா, ஸ்ரீஜா அகுலா ஜோடி 0-3 என யு மும்பா அணியின் ஆகாஷ் பால், பொ்னாடெட் சாக்ஸ் ஜோடியிடம் தோற்றது.

இதன் மூலம் யு மும்பா அணி 5-4 என முன்னிலை பெற்றது.

மாற்று ஆடவா் ஒற்றையா் ஆட்டத்தில் ஜெய்ப்பூா் அணியின் ஜீத் சந்திரா 2-1 என யு மும்பா அணியின் ஆகாஷ் பாலை வென்றாா்.

இரு அணிகள் இடையிலான டை 6-6 என சமநிலையை அடைந்தது. கடைசியாக நடைபெற்ற மாற்று மகளிா் ஒற்றையா் ஆட்டத்தில் ஜெய்ப்பூா் அணியின் பிரிட் ஈா்லாண்ட் 2-1 என யு மும்பா அணியின் யஷஸ்வினி கோா்படேவை வென்றாா்.

இறுதியில் யு மும்பாவை 8-7 என வீழ்த்தியது ஜெய்ப்பூா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com