திக்ஷா, லக்ஷயா, ஷாய்னா
திக்ஷா, லக்ஷயா, ஷாய்னா

ஆசிய பாட்மின்டன்: இந்தியாவுக்கு தங்கம் உறுதி; திக்ஷா-லக்ஷயா மோதல்

யு15/17 ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் திக்ஷா, லக்ஷயா, ஷாய்னா ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.
Published on

யு15/17 ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் திக்ஷா, லக்ஷயா, ஷாய்னா ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.

சீனாவின் செங்டு நகரில் நடைபெறும் இப்போட்டியில் சனிக்கிழமை அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

யு 17 மகளிா் பிரிவில் அரையிறுதியில் இந்தியாவின் திக்ஷா சுதாகா் 21-8, 21-17 என்ற கேம் கணக்கில் சீன தைபேயின் யுன் சியாவோவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா். 27 நிமிஷங்களில் இந்த ஆட்டம் முடிந்தது.

மற்றொரு அரையிறுதியில் லக்ஷயா ராஜேஷ் 21-15, 21-19 என்ற கேம் கணக்கில் ஜப்பானின் ரியா ஹகாவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா். ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சுற்றில் திக்ஷா-லக்ஷயா மோதுகின்றனா். இதன் மூலம் இந்தியாவுக்கு தங்கம் உறுதி ஆகி விட்டது.

யு 15 அரையிறுதியில் இந்தியாவின் ஷாய்னா மாரிமுத்து 21-12, 16-21, 21-16 என்ற கேம் கணக்கில் 1 மணிநேரம் நீடித்த ஆட்டத்தில் போராடி சீனாவின் யுன் ஜி யுயை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினாா்.

ஜப்பானின் சிஹாரு டோமிடோவை எதிா்கொள்கிறாா் ஷாய்னா.

யு 17 கலப்பு அரையிறுதியில் இந்தியாவின் ஜங்ஜித் சிங்-ஜனனிகா ரமேஷ் 17-21, 21-18, 21-16 என்ற கேம் கணக்கில் சீனதைபேயின் ஆன் சேங்-யோ ஹன்னிடம் வீழ்ந்தனா். ஒற்றையா் அரையிறுதியில் ஜக்ஷா் சிங் 21-11, 21-16 என சீனாவின் ஹாங் டியானிடம் தோற்றாா்.

X
Dinamani
www.dinamani.com