கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் பளுதூக்குதல், குத்துச்சண்டை போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வென்று குவித்தனர்.
காமன்வெல்த் போட்டியின் கடைசி நாளான இன்று (ஆகஸ்ட் 2) இந்தியா 39 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்ட இந்திய வீரர், வீராங்கனைகளில் ஒரு பிரிவினர் தாயகம் திரும்பினர். இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளை வரவேற்க விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். தாயகம் வந்தடைந்த மீராபாய் சானு, லவ்பிரீத் சிங், ரிஷிகாந்தா சிங் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Summary
An enthusiastic welcome was accorded to the Indian athletes who returned home after winning medals at the Glasgow Commonwealth Games.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காமன்வெல்த்: தங்க வேட்டையில் இந்தியா! மகளிர் குத்துச்சண்டையில் 5-வது தங்கம்!

காமன்வெல்த்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு ஐந்தாவது பதக்கத்தை உறுதிசெய்த சாக்ஷி!

காமன்வெல்த்: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் ஹர்ஜிந்தர் கௌர்!

காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK




