ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

2 கோல்கள் அடித்த நெய்மர்..! கொண்டாட்டத்தின் மூலமாக விமர்சனங்களுக்கு பதிலடி!

உலகக் கோப்பை வெளியேற்றத்துக்குப் பிறகான முதல் போட்டியில் அசத்திய நெய்மர் குறித்து...

News image

கோல் அடித்த மகிழ்ச்சியில் நெய்மர். - படங்கள்: இன்ஸ்டா/ santosfc

Updated On :26 ஜூலை 2026, 5:13 pm IST

உலகக் கோப்பை வெளியேற்றத்துக்குப் பிறகான முதல் கிளப் அளவிலான கால்பந்து போட்டியில் நெய்மர் இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார்.

கால்பந்து உலகக் கோப்பையில் பிரேசில் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நார்வே அணியிடம் 1-2 என தோல்வியுற்றது. இது நெய்மரின் கடைசி உலகக் கோப்பை எனக் கூறப்படுகிறது.

நெய்மர் தற்போது அவரது சொந்த நாட்டிலுள்ள சீரி ஏ தொடரில் தான் சிறுவயதில் விளையாடிய சன்டோஷ் எப்ஃசி கிளப்பில் விளையாடி வருகிறார்.

இன்றைய சபகோயென்ஸ் எதிரான போட்டியில் சன்டோஷ் எப்ஃசி போட்டியில் நெய்மர் களமிறங்கினார். இந்தப் போட்டியில் நெய்மர் 36ஆவது நிமிஷத்திலும் 89ஆவது நிமிஷத்திலும் (பெனால்டி) கோல் அடித்து அசத்தினார்.

இந்தப் போட்டி 2-2 என சமனில் முடிந்தது. நெய்மரின் கடைசி நிமிஷ கோல் டிராவை கொடுத்தது. 34 வயதாகும் நெய்மர் காயம் காரணமாக உலகக் கோப்பையிலும் முழு நேரம் விளையாடாதது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் நெய்மர் 9 ஷாட்டுகளை அடித்தார். அதில் இலக்கை நோக்கி 5 முறை அடித்தது அசத்தினார். இந்த சீசனில் 9 போட்டிகளில் நெய்மர் 6 கோல்கள், 2 அசிஸ்ட்டுகளை செய்து அசத்தியுள்ளார்.

முன்னதாக அவர் பயிற்சிக்கு வராமல் போக்கர் விளையாடியது விமர்னத்துக்கு உள்ளானது. கோல் அடித்து அந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்தார்.

கடந்த சீசனிலும் இந்த அணியை ரிலிகேஷனில் இருந்து காப்பாற்றினார். நடப்பு சீசனிலும் அதேமாதிரியான சூழ்நிலையில்தான் இருக்கிறது.

சன்டோஷ் அணிக்கு கோப்பை வாங்கி தரவேண்டுமானால் நெய்மர் அடுத்த சீசனும் இங்கு விளையாட வேண்டியிருக்கும். அவரது ஒப்பந்தம் மேலும் நீட்டிக்கப்படுமா என்பது சில வாரங்களில் தெரியவரவிருக்கிறது.

Summary

Neymar Scores Twice On Santos Return After World Cup Exit

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.