ஃபிஃபா ஆடவர் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகளை நிர்வகிக்க 2 ஆவது முறையாகப் பெண் நடுவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஆடவர்களுக்கான ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகள் கடந்த ஜூன் 11 அன்று கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் 48 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த நிலையில், வியாழக்கிழமை (ஜூன் 18) அன்று அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற குரூப் ஏ அணிகளான செக் குடியரசு மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த டோரி பென்சோ தலைமையில் புரூக் மேயோ மற்றும் கேத்ரின் நெஸ்பிட் ஆகிய மூன்று பெண்கள் நடுவர்களாக இடம்பெற்றனர்.
இதன்மூலம், ஃபிஃபா ஆடவர் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை நிர்வகிக்கும் 2 ஆவது பெண் நடுவர் குழு என்ற பெருமையை நடுவர் டோரி பென்சோ தலைமையிலான இந்தக் குழுவினர் பெற்றுள்ளனர்.
முன்னதாக, ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக பிரான்ஸ் நாட்டின் ஸ்டெஃபானி ஃபராப்பார்ட் தலைமையில் நியூஸா பேக் (பிரேசில்) மற்றும் காரன் டையாஸ் மதீனா (மெக்சிகோ) உள்ளிட்ட பெண் நடுவர் குழு, கடந்த 2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற போட்டியை நிர்வகித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Female referees have been included in the FIFA Men's Football World Cup for the second time.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜன நாயகன் பாணியில் ஜூட் நாயகன்..! ஃபிஃபா வெளியிட்ட போஸ்டர்!

கால்பந்து வரலாற்றில் முதல்முறை... ஃபிஃபா தரவரிசை டாப்4ல் இருக்கும் 4 அணிகளும் அரையிறுதிக்குத் தேர்வு!
ஃபிஃபா உலகக் கோப்பை: 36 லட்சம் பேர் பங்கேற்று வரலாற்றுச் சாதனை!

ஃபிஃபா உலகக் கோப்பை: 7 கோல்கள் அடித்து ஜெர்மனி அபார வெற்றி!
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK




