கால்பந்து உலகக் கோப்பை 2026ல் நாக் அவுட் சுற்றுக்கு, இதுவரை 6 அணிகள் தேர்வாகியுள்ளன. முதல் அணியாக மெக்சிகோ தேர்வாக, ஆறாவது அணியாக நார்வே அணி தேர்வாகியது.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் ஜூன் 11ஆம் தேதி தொடங்கிய இந்த உலகக் கோப்பைப் போட்டிகளின் லீக் சுற்றுப் போட்டிகள் 60 சதவிகிதம் முடிவடைந்துள்ளன.
நாக் அவுட் சுற்றான ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் இதுவரை 6 அணிகள் தேர்வாகியுள்ளன. அதில் மெக்சிகோ, அமெரிக்கா, ஜெர்மனி, ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே ஆகிய அணிகள் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
குரூப் ஏ பிரிவில் மெக்சிகோவும் குரூப் டி பிரிவில் அமெரிக்காவும் குருப் இ பிரிவில் ஜெர்மனியும் குரூப் ஐ பிரிவில் பிரான்ஸ், நார்வே அணிகளும் குரூப் ஜே பிரிவில் ஆர்ஜென்டீனாவும் தேர்வாகியுள்ளன.
குரூப் பி,சி, எஃப், ஜி, எச், கே, எல் ஆகிய பிரிவுகளில் ஒரு அணியும் இதுவரை தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டீனா இரண்டு போட்டிகளில் அசத்தல் வெற்றி பெற்று முன்னேறியுள்ளன.
Six teams in â
— FIFA World Cup (@FIFAWorldCup) June 23, 2026
26 spots to fill ð#FIFAWorldCup #Qualified @Mcdonalds pic.twitter.com/10J6bdBbtU
Summary
6/32: The 6 teams that have qualified for the World Cup knockout stage!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










