கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வான உலகக் கோப்பையை நடத்தும் 3 நாடுகள்!

கால்பந்து உலகக் கோப்பையை நடத்தும் 3 நாடுகளும் அடுத்த சுற்றுக்குத் தேர்வாகியுள்ளது குறித்து...

News image

நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வான உலகக் கோப்பையை நடத்தும் நாடுகள்! - படம்: எக்ஸ் / ஃபிஃபா உலகக் கோப்பை.

Updated On :25 ஜூன் 2026, 7:48 pm IST

கால்பந்து உலகக் கோப்பையை நடத்தும் 3 நாடுகளும் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றான அடுத்த சுற்றுக்குத் தேர்வாகி அசத்தியுள்ளன.

முதல்முறையாக 48 அணிகள் பங்குபெறும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் ஜூன் 11 முதல் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகள் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகின்றன.

குரூப் ஏ பிரிவில் இருக்கும் மெக்சிகோ அணி முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகின. இந்த அணி அனைத்து போட்டிகளிலும் வென்று, 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

குரூப் பி பிரிவில் இருக்கும் கனடா அணி ஒரு டிரா, ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் இரண்டாம் இடம் பிடித்து அடுத்த சுற்றுக்குத் தேர்வாகியது.

குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வென்றுள்ளன. இந்த அணியும் அடுத்த சுற்றுக்குத் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த உலகக் கோப்பையை நடத்திய கத்தார் அணி இந்த உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியதும் கவனிக்கத்தக்கது. இந்த மூன்று அணிகளில் எந்த அணியாவது உலகக் கோப்பைகளை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதுவரை போட்டிகளை நடத்திய நாடுகளில் 6 அணிகள் மட்டுமே உலகக் கோப்பையை வென்றுள்ளன. உருகுவே (1930), இத்தாலி (1934), இங்கிலாந்து (1966), ஜெர்மனி (1974), ஆர்ஜென்டீனா (1978), பிரான்ஸ் (1988) ஆகியவை வென்றுள்ளன.

Summary

The FIFA World Cup co-hosts are progress to knockout stage!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.