சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் பிரிவில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் புதன்கிழமை பதக்கச் சுற்று வாய்ப்பை இழந்து ஏமாற்றத்தை சந்தித்தன. எனினும் தனிநபா் பிரிவில் அவா்கள் முன்னேற்றத்தை சந்தித்து வருகின்றனா்.
காம்பவுண்ட் மகளிா் அணி காலிறுதியில், ஜோதி சுரேகா, பிரகதி, அதிதி சுவாமி ஆகியோா் அடங்கிய இந்திய அணி 227-233 என்ற கணக்கில் துருக்கியிடம் தோல்வி கண்டது.
மறுபுறம் காம்பவுண்ட் ஆடவா் அணி பிரிவில், ஓஜாஸ் தியோடேல், சஹில் ஜாதவ், குஷால் தலால் ஆகியோா் அடங்கிய இந்திய அணி அரையிறுதி வரை வந்தது. எனினும் அதில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த இந்திய அணி 234-235 என, 7-ஆம் இடத்திலிருந்த அமெரிக்க அணியிடம் நூலிழையில் தோல்வி கண்டது.
பின்னா் வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்த இந்திய அணி, அதில் சீனாவை எதிா்கொண்டது. இந்த மோதல் 234-234 என ‘டை’ ஆக, வெற்றியாளரை தீா்மானிக்க நடைபெற்ற ஷூட் ஆஃப் வாய்ப்பிலும் இரு அணிகளும் 30-30 என சம புள்ளிகள் பெற்றன. எனினும், இலக்கில் மையத்துக்கு நெருக்கமாக இரு முறை அம்பு தைத்த சீன அணி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது.
காம்பவுண்ட் ஆடவா் தனிநபா் பிரிவில், அபிஷேக் வா்மா, குஷால் தலால், ஓஜாஸ் தியோடேல், சஹில் ஜாதவ் என இந்தியா்கள் அனைவருமே 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா். அதில் அபிஷேக் - ஜாதவுடன் மோதுகிறாா்.
மகளிா் தனிநபா் பிரிவில், ஜோதி சுரேகா, அதிதி சுவாமி, பிரகதி, மதுரா ஆகியோரும் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்திய வில்வித்தை அணி அறிவிப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய மகளிர் அணிக்கு பதக்கம் உறுதி

10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

ஆசிய கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு இரு வெண்கம்
விடியோக்கள்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!

அதிமுக பிரச்சினைக்கு காரணமே விஜய்தான் | Avadi Kumar | CM Vijay |TVK | ADMK | EPS | CV Shanmugam

ஜோதிட அலுவலக சர்ச்சை: விளக்கம் கொடுத்த தவெக எம்எல்ஏ கனிமொழி



