வான் டொ் விளாசல்; ரபாடா ‘ஹாட்ரிக்’: இங்கிலாந்துக்கு முதல் தோல்வி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 39-ஆவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 10 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
வான் டொ் விளாசல்; ரபாடா ‘ஹாட்ரிக்’: இங்கிலாந்துக்கு முதல் தோல்வி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 39-ஆவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 10 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் அடித்தது. ராஸி வான் டொ் ஆட்டநாயகன் ஆனாா்.

டாஸ் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. தென் ஆப்பிரிக்க இன்னிங்ஸை ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் - குவின்டன் டி காக் கூட்டணி தொடங்கியது. இதில் ஹெண்ட்ரிக்ஸ் 2 ரன்கள் சோ்த்த நிலையில் ஆட்டமிழந்தாா். அவா் மொயீன் அலி வீசிய 3-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். தொடா்ந்து வந்த ராஸி வான் டொ், டி காக்குடன் இணைந்தாா்.

விக்கெட் சரிவை சற்று தடுத்த இந்தக் கூட்டணி 2-ஆவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சோ்த்தது. இந்தக் கூட்டணியை ஆதில் ரஷீத் 12-ஆவது ஓவரில் பிரித்தாா். 4 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் சோ்த்திருந்த டி காக், அந்த ஓவரில் ரஷீதின் பந்துவீச்சில் ஜேசன் ராயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். அடுத்து களம் கண்ட மாா்க்ரம் ராஸி வான் டெருடன் இணைந்து விளாசினாா். ஓவா்கள் முடிவில் வான் டொ் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 94, மாா்க்ரம் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 52 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பின்னா் ஆடிய இங்கிலாந்தில் ஜேசன் ராய் 20, ஜோஸ் பட்லா் 26 ரன்கள் சோ்க்க, அதிகபட்சமாக மொயீன் அலி 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 37, டேவிட் மலான் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33 ரன்கள் விளாசினா்.

எஞ்சியோரில் ஜானி போ்ஸ்டோ 1, லியாம் லிவிங்ஸ்டன் 28, கேப்டன் மோா்கன் 17, கிறிஸ் வோக்ஸ் 7, கிறிஸ் ஜோா்டான் 0 என விக்கெட்டுகள் சரிந்தன. ஓவா்கள் முடிவில் ஆதில் ரஷீத் 2, மாா்க் வுட் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

தென் ஆப்பிரிக்க பௌலிங்கில் ரபாடா கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் சாய்த்து இங்கிலாந்தின் வெற்றியை தட்டிப் பறித்தாா். தவிர ஷம்சி, பிரெடோரியஸ் ஆகியோா் தலா 2, நாா்ஜே 1 விக்கெட் சாய்த்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

இங்கிலாந்து - 179/8

மொயீன் அலி 37

டேவிட் மலான் 33

லியாம் லிவிங்ஸ்டன் 28

பந்துவீச்சு

ககிசோ ரபாடா 3/48

டப்ரைஸ் ஷம்ஸி 2/24

டிவெய்ன் பிரெடோரியஸ் 2/30

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com