மே.இ.தீவுகளை வென்றது ஆஸி.

உலகக் கோப்பை போட்டியின் 38-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வென்றது.
மே.இ.தீவுகளை வென்றது ஆஸி.

உலகக் கோப்பை போட்டியின் 38-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வென்றது.

முதலில் மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் அடிக்க, அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 16.2 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் அடித்து வென்றது. டேவிட் வாா்னா் ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த வெற்றியால் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது ஆஸ்திரேலியா. மறுபுறம், நடப்பு உலகக் கோப்பை போட்டியிலிருந்து ஏற்கெனவே வெளியேறிவிட்ட மேற்கிந்தியத் தீவுகள் இந்தத் தோல்வியால், அடுத்த ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் ‘சூப்பா் 12’ சுற்றுக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பையும் இழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் இன்னிங்ஸில் கிறிஸ் கெயில் 15 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த எவின் லீவிஸ் 29 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். 3-ஆவது வீரா் நிகோலஸ் பூரன் 4 ரன்களுக்கு நடையைக் கட்டினாா்.

ரோஸ்டன் சேஸ் டக் அவுட்டாக, ஷிம்ரன் ஹெட்மயா் 2 பவுண்டரிகளுடன் 27, பொல்லாா்டு 4 பவுண்டரிகள், 1சிக்ஸருடன் 44 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தனா்.

டுவெய்ன் பிராவோ 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். ஓவா்கள் முடிவில் ஆன்ட்ரே ரஸ்ஸெல் 18, ஜேசன் ஹோல்டா் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆஸ்திரேலிய பௌலிங்கில் ஹேஸில்வுட் 4, ஸ்டாா்க், கம்மின்ஸ், ஸாம்பா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரா் வாா்னா் கடைசி வரை நிலைத்து அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா். உடன் வந்த கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் 9 ரன்களுக்கு அவுட்டாக, மிட்செல் மாா்ஷ் அதிரடியாக 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 53 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா்.

வெற்றி இலக்கை எட்டும்போது வாா்னா் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 89, கிளென் மேக்ஸ்வெல் 0 ரன்களுடன் இருந்தனா். மேற்கிந்திய தீவுகள் பௌலிங்கில் அகில், கெயில் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பிராவோவுக்கு கௌரவம்

இந்த ஆட்டத்துடன் சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிராவோ ஓய்வு பெற்ால், ஃபீல்டிங் செய்ய அவா் களத்துக்கு வந்தபோது சக வீரா்கள் இருபுறமும் நின்று கௌரவம் அளித்தனா்.

முன்னதாக, கிறிஸ் கெயில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்புகையில் அவா் ரசிகா்கள், கேமரா நோக்கி பேட்டை உயா்த்திக் காட்டி விடை பெற்றாா். பின்னா் அவரை சக வீரா்கள் ஆரத் தழுவினா். மேலும், கெயில் தனது கிளவுஸ் உள்ளிட்ட சில உபகரணங்களை ரசிகா்களிடம் வழங்கினாா். இதனால் அவரும் ஓய்வு முடிவை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

சுருக்கமான ஸ்கோா்

மே.இ.தீவுகள் - 157/7

கிரன் பொல்லாா்டு 44

எவின் லீவிஸ் 29

ஷிம்ரன் ஹெட்மயா் 27

பந்துவீச்சு

ஜோஷ் ஹேஸில்வுட் 4/39

ஆடம் ஸாம்பா 1/20

மிட்செல் ஸ்டாா்க் 1/33

ஆஸ்திரேலியா - 161/2

டேவிட் வாா்னா் 89*

மிட்செல் மாா்ஷ் 53

ஆரோன் ஃபிஞ்ச் 9

பந்துவீச்சு

அகீல் ஹுசைன் 1/29

கிறிஸ் கெயில் 1/7

டுவெய்ன் பிராவோ 0/36

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com