டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானின் பாபர் ஆஸம் புதிய சாதனை

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் 4 அரை சதங்களுடன் அதிக ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானின் பாபர் ஆஸம் புதிய சாதனை

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் 4 அரை சதங்களுடன் அதிக ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.

ஸ்காட்லாந்துக்கு எதிராக 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி. அந்த அணியின் கேப்டன் பாபர் ஆஸம் 47 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அவருடைய 4-வது அரை சதம் இது. 

2021 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாபர் ஆஸம்

68*(52)
9(11)
51(47)
70(49)
66(47)

ஸ்டிரைக் ரேட் - 128.15.

மேத்யூ ஹேடன், விராட் கோலிக்கு அடுத்ததாக ஒரு டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 4 அரை சதங்கள் எடுத்த வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் பாபர் ஆஸம். 

இந்த உலகக் கோப்பையில் 5 ஆட்டங்களில் 264 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 2-ம் இடத்தில் உள்ள இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர், 5 ஆட்டங்களில் 240 ரன்கள் எடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com