நமீபியாவுக்கு எதிராக விளையாடும் இந்திய அணி: இரு முக்கிய அம்சங்கள்

நமீபியாவுக்கு எதிரான ஆட்டம் இரு அம்சங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது.
நமீபியாவுக்கு எதிராக விளையாடும் இந்திய அணி: இரு முக்கிய அம்சங்கள்

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நமீபியாவுக்கு எதிராகத் தனது கடைசி லீக் ஆட்டத்தை விளையாடுகிறது கோலி தலைமையிலான இந்திய அணி.

ஞாயிறன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து அணி. இதனால் இந்திய அணியின் அரையிறுதிக் கனவு தகர்ந்தது.

எனினும் நமீபியாவுக்கு எதிரான ஆட்டம் இரு அம்சங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது.

டி20 ஆட்டத்தில் முதல்முறையாக நமீபியாவுக்கு எதிராக மோதுகிறது இந்திய அணி. இதற்கு முன்பு அந்த அணிக்கு எதிராகக் கடைசியாக விளையாடிய சர்வதேச ஆட்டம் - 2003 ஒருநாள் உலகக் கோப்பையில்.

மேலும் இந்திய அணி விளையாடவுள்ள 150-வது சர்வதேச டி20 இது. 149  ஆட்டங்களில் 94-ல் வெற்றி பெற்று 51-ல் தோற்று வெற்றி விகிதத்தில் (64.8%) 2-ம் இடம் பிடித்துள்ளது. 68.1% வெற்றி விகிதத்துடன் ஆப்கானிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com