இதுக்கு இல்லையா ஒரு எண்டு?: இந்திய அணியின் உலகக் கோப்பைக் கனவை மீண்டும் தகர்த்த நியூசிலாந்து அணி!

கடந்த 18 வருடங்களாக உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்திய அணிக்குப் பெரிய தடைக்கல்லாக உள்ளது நியூசிலாந்து அணி.
இதுக்கு இல்லையா ஒரு எண்டு?: இந்திய அணியின் உலகக் கோப்பைக் கனவை மீண்டும் தகர்த்த நியூசிலாந்து அணி!

கடந்த 18 வருடங்களாக உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்திய அணிக்குப் பெரிய தடைக்கல்லாக உள்ளது நியூசிலாந்து அணி. 2021 டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் நியூசிலாந்தால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பறிபோயிருக்கிறது. (முதலில் தோற்ற இரு ஆட்டங்களும் முக்கியக் காரணம் என்றாலும் நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து தோல்வியடைந்திருந்தால் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்திருக்கும்.)

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நமீபியாவுக்கு எதிராகத் தனது கடைசி லீக் ஆட்டத்தை விளையாடுகிறது கோலி தலைமையிலான இந்திய அணி.

ஞாயிறன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து அணி. இதனால் இந்திய அணியால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் நமீபியாவை வென்றாலும் இந்திய அணியால் அரையிறுதிக்குள் நுழைய முடியாது. 

9 வருடங்களுக்குப் பிறகு ஒரு ஐசிசி போட்டியில் நாக் அவுட் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெறவில்லை.

கடந்த 2 வருடங்களில் மூன்று உலகக் கோப்பைப் போட்டிகளில் நியூசிலாந்து அணியால் இந்திய அணியின் கனவுகள் தகர்ந்துள்ளன. 

2019 ஒருநாள் உலகக் கோப்பை - அரையிறுதியில் இந்தியாவைத் தோற்கடித்தது நியூசிலாந்து 

2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் -  இறுதிச்சுற்றில் இந்திய அணியைத் தோற்கடித்து சாம்பியன் ஆனது நியூசிலாந்து. 

2021 டி20 உலகக் கோப்பை - ஆப்கானிஸ்தானைத் தோற்கடித்து இந்திய அணியை வெளியேற்றியது நியூசிலாந்து.

நியூசிலாந்து அணி
நியூசிலாந்து அணி

இதுதவிர உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்திய அணியால் நியூசிலாந்தை 2003-க்குப் பிறகு வெல்ல முடியாததும் இன்னொரு சோகம். 2003 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் நியூசிலாந்தை கங்குலி தலைமையிலான இந்திய அணி வென்றது. அதன்பிறகு 2007 டி20 உலகக் கோப்பை, 2016 டி20 உலகக் கோப்பை, 2019 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிச்சுற்று, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று, 2021 டி20 உலகக் கோப்பை எனத் தொடர்ந்து உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோற்று வருகிறது. இதனால் இந்திய அணியால் உலகக் கோப்பையையும் வெல்ல முடியாமல் உள்ளது. இதற்கொரு விடிவுகாலம் எப்போது பிறக்கும்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com