டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தியது அயர்லாந்து

​டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தியது அயர்லாந்து


டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

டி20 உலகக் கோப்பையின் 3-வது ஆட்டத்தில் அயர்லாந்து, நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

இதன்படி, முதல் பேட்டிங் செய்த நெதர்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து தொடக்க ஆட்டக்காரர்களாக பால் ஸ்டிர்லிங்க் மற்றும் கெவின் ஓ பிரையன் களமிறங்கினர். கெவின்  ஓ பிரையன் 9 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி 8 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஆனால், கெராத் டெலானி அதிரடி காட்டி 29 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார்.

ஆனால், நிதானம் காட்டிய ஸ்டிர்லிங்க் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் சேர்த்தார்.

15.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்த அயர்லாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com