மேற்கிந்தியத் தீவுகளை மிரள வைத்த ஆப்கானிஸ்தான்: பேட்டிங்கிலும் திணறல்!
By DIN | Published On : 20th October 2021 09:58 PM | Last Updated : 20th October 2021 09:58 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது.
டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணி துபை ஐசிசி அகாடெமி மைதானத்தில் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதற்கேற்ப ஹஸ்ரதுல்லா ஸஸாய் மற்றும் முகமது ஷஸாத் மிரட்டல் தொடக்கத்தைத் தந்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 8.5 ஓவர்களில் 90 ரன்கள் சேர்த்தது. அரைசதம் அடித்த ஸஸாய் 35 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார்.
இதையும் படிக்க | இலங்கையைக் காப்பாற்றிய நிசன்கா, ஹசரங்கா: அயர்லாந்துக்கு 172 ரன்கள் இலக்கு
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷஸாதும் அரைசதம் அடித்து 35 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, ஆப்கானிஸ்தான் பேட்டிங்கில் சரிவு ஏற்பட்டது. குர்பாஸ் 26 பந்துகளில் 33 ரன்களும், நஜிபுல்லா 19 பந்துகளில் 23 ரன்களும் எடுத்தனர்.
இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஒபெட் மெக்காய் 2 விக்கெட்டுகளையும், ரவி ராம்பால், ஹேடன் வால்ஷ் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
190 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் 5 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.