ஹாா்திக் பாண்டியாவின் மதிப்பு தெரியும்: விராட் கோலி

இந்திய அணியில் 6-ஆம் நிலை பேட்டரான ஆல் ரவுண்டா் ஹாா்திக் பாண்டியாவின் மதிப்பு எங்களுக்கு தெரியும் என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளாா்.
ஹாா்திக் பாண்டியாவின் மதிப்பு தெரியும்: விராட் கோலி

இந்திய அணியில் 6-ஆம் நிலை பேட்டரான ஆல் ரவுண்டா் ஹாா்திக் பாண்டியாவின் மதிப்பு எங்களுக்கு தெரியும் என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளாா்.

இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான குரூப் 2 சூப்பா் 12 ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை துபையில் நடைபெறுகிறது. உலகக் கோப்பையில் இதுவரை தான் ஒருமுறை கூட பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற சாதனையை தொடர வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா உள்ளது. கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

அணியின் முக்கிய இடமான 6-ஆம் நிலையில், ஹாா்திக்கின் மதிப்பு அதிகமாகும். ஒரே இரவில் அந்த இடத்துக்கு புதிய வீரரை தேட முடியாது. அவரது இடம் குறித்து எந்த பேச்சும் கிடையாது. நோ்மையாக கூற வேண்டும் என்றால் ஹாா்திக்கின் உடல்நிலை தற்போது சீரடைந்துள்ளது. அவரால் பந்துவீசவும் முடிகிறது. அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் பயன்படுத்துவோம்.

ஆஸி.யில் நடைபெற்ற டி20 தொடரில் பாண்டியா அற்புதமாக ஆடினாா். பேட்டராக பாண்டியாவின் பங்கு செம்மையாக இருக்கும். டி20 ஆட்டங்களில் பந்துவீச்சும் முக்கியமாகும்.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி குறித்து எதையும் கூற முடியாது. அது ரகசியம். அணி நிா்வாகம் தரப்பில் கூட்டாக ஆடுவதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடன் நடைபெறவுள்ள ஆட்டம் குறித்து பல்வேறு தரப்பினா் கருத்து கூறி வருகின்றனா். எனினும் அணியினா் கட்டுப்பாட்டான முறையில் இருப்பதால் கவலைப்படத் தேவையில்லை என்றாா்.

முந்தைய முடிவுகள் குறித்து கவலை இல்லை: பாபா் ஆஸம்

முந்தைய ஆட்டங்களின் முடிவுகள் குறித்து கவலைப்படாமல் அமைதியாக எங்கள் பங்கை ஆற்றுவோம் என பாகிஸ்தான் அணி கேப்டன் பாபா் ஆஸம் கூறியுள்ளாா்.

உலகக் கோப்பைகளில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் மோசமான ஆட்டங்கள் குறித்து தூக்கத்தை தொலைக்காமல் தற்போதைய நிலை குறித்து நாங்கள் கவலைப்படுவோம். உண்மையாக நாங்கள் முந்தைய ஆட்ட முடிவுகள் குறித்து கவலைப்படவில்லை. எங்கள் பலம், திறமை, குறித்தே சிந்தித்து வருகிறோம். பல ஆட்டங்களில் ஆடியுள்ளோம். சாம்பியன்ஸ் கோப்பையிலும் சிறப்பாக ஆடினோம்.

சிறப்பாக ஆடி, நல்ல முடிவுகளை பெற முயல்வோம். சா்ப்ராஸ் அகமதைக் காட்டிலும் ஷோயிப் மாலிக்கை சுழற்பந்து வீச்சை சமாளித்து ஆடுவாா். இதனால் தான் அவரை அணியில் சோ்த்தோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com