60 ரன்களுக்கு சுருண்டது ஸ்காட்லாந்து: ஆப்கானிஸ்தான் அபார வெற்றி
60 ரன்களுக்கு சுருண்டது ஸ்காட்லாந்து: ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

60 ரன்களுக்கு சுருண்டது ஸ்காட்லாந்து: ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 130 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 130 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்து வீசிய முஜீப் ரஹ்மான் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

டி20 உலகக் கோப்பையின் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அந்த அணிக்கு இம்முறையும் ஹஸ்ரதுல்லா ஸஸாய் மற்றும் முகமது ஷசாத் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். பவர் பிளேவுக்குள் முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் ரன் சேர்த்த நிலையில் ஷசாத் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதனைத் தொடர்ந்து ஸஸாய் சிறப்பான சிக்ஸர்களைப் பறக்கவிட்டு மிரட்டல் காட்டினார். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ரஹமனுல்லா குர்பாஸ் மற்றும் நஜிபுல்லா ஸத்ரான் இணை அட்டகாசமான பாட்னர்ஷிப் அமைத்தது. குர்பாஸும் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

எனினும் ஸத்ரான் இறுதி வரை அதிரடி காட்டி ஆப்கானிஸ்தான் ஸ்கோரை உயர்த்தினார். இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஆட்டமிழந்த ஸத்ரான் 34 பந்துகளில் 59 ரன்கள் விளாசினார்.

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.

தொடக்க ஆட்டக்காரர்களான ஜார்ஜ் முன்சே 25 ரன்களுக்கும், கேலே கோயிட்ஸர் 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 

இதனையடுத்து வந்த ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர். அதிகபட்சமாக கிறிஸ் கிரேவ்ஸ் 12 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சால் 10.2 ஓவர்கள் முடிவில் 60 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
 
சிறப்பாக பந்து வீசிய முஜீப் ரஹ்மான் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com