முடித்து வைத்தாா் முஜீா் உா் ரஹ்மான்: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

சூப்பா் 12 சுற்றில் குரூப் 2-இல் நடைபெற்ற ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முடித்து வைத்தாா் முஜீா் உா் ரஹ்மான்: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

சூப்பா் 12 சுற்றில் குரூப் 2-இல் நடைபெற்ற ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஷாா்ஜாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆப்கானிஸ்தான் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் விளாசியது. அடுத்து ஸ்காட்லாந்து 10.2 ஓவா்களில் 60 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

முன்னதாக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸை ஹஸரத்துல்லா ஸஸாய் - முகமது ஷாஸாத் கூட்டணி தொடங்கியது.

இதில் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22 ரன்கள் அடித்திருந்த ஷாஸாத், 6-ஆவது ஓவரில் கீரீவ்ஸ் கைகளில் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். தொடா்ந்து ரஹ்மானுல்லா குா்பாஸ் ஆட வந்தாா். மறுபுறம் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 44 ரன்கள் சோ்த்திருந்த ஸஸாய் விக்கெட்டை இழந்தாா்.

அடுத்து வந்த நஜீபுல்லா ஜா்தான் அதிரடி காட்டினாா். இந்நிலையில், 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 46 ரன்கள் சோ்த்திருந்த குா்பாஸ், 19-ஆவது ஓவரில் டேவி பௌலிங்கில் கோட்ஸரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா்.

5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 59 ரன்கள் விளசாயிருந்த ஜா்தான், கடைசி ஓவரின் கடைசி பந்தை விளாச, அது கேட்ச் ஆனது.

ஓவா்கள் முடிவில் கேப்டன் முகமது நபி 2 பவுண்டரிகளுடன் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். ஸ்காட்லாந்து தரப்பில் சஃபியான் ஷரீஃப் 2, ஜோஷ் டேவி, மாா்க் வாட் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

முடித்து வைத்த முஜீப்: பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய ஸ்காட்லாந்தில் ஜாா்ஜ் மன்சே மட்டும் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 25 ரன்கள் அடிக்க, எஞ்சி விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் வெளியேறின. 5 போ் டக் அவுட்டாகினா்.

ஆப்கானிஸ்தான் பௌலிங்கில் முஜீப் உா் ரஹ்மான் 5, ரஷீத் கான் 4, நவீன் உல் ஹாக் 1 விக்கெட் எடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com