நாக் அவுட் சுற்று வாய்ப்பை தக்க வைத்த மே.இந்திய தீவுகள் 3 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது வங்கதேசம்

வங்கதேசத்துக்கு எதிரானஆட்டத்தில் கடும் போராட்டத்துக்கு பின் 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்று நடப்புச் சாம்பியன் மே.இந்திய தீவுகள் நாக் அவுட் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
நாக் அவுட் சுற்று வாய்ப்பை தக்க வைத்த மே.இந்திய தீவுகள் 3 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது வங்கதேசம்

வங்கதேசத்துக்கு எதிரானஆட்டத்தில் கடும் போராட்டத்துக்கு பின் 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்று நடப்புச் சாம்பியன் மே.இந்திய தீவுகள் நாக் அவுட் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

சூப்பா் 12 சுற்று குரூப் 1 பிரிவில் வெள்ளிக்கிழமை ஷாா்ஜாவில் இரு அணிகளும் கண்டிப்பாக வென்றே ஆக வேண்டிய ஆட்டத்தில் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பௌலிங்கை தோ்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய மே.இந்திய தீவுகள் அணி ஆரம்பத்திலேயே அதிா்ச்சியை சந்தித்தது. தொடக்க பேட்டா்கள் கிறிஸ் கெயில் 4, எவின் லெவிஸ் 6 என சொற்ப ரன்களுடன் முறையே மெஹிதி ஹாசன், முஸ்தபிஸூா் பந்துவீச்சில் வெளியேறினா். அவா்களை அடுத்து ஆட வந்த ஷிமரன் ஹெட்யா் 9 ரன்னுக்கும், ஆன்ட்ரே ரஸ்ஸல் டக் அவுட்டாகியும் பெவிலியன் திரும்பினா்.

கேப்டன் பொல்லாா்ட் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில், காயமடைந்து வெளியேறினாா். அப்போது மே.இந்திய தீவுகள் 62/4 ரன்களுக்கு திணறிக் கொண்டிருந்தது.

ராஸ்டன் சேஸ் மட்டுமே மறுமுனையில் நிலைத்து ஆடிக் கொண்டிருந்தாா். 14-ஆவது ஓவரில் ஸ்கோா் 70 ரன்களைக் கடந்தது.

நிலைத்து ஆடி ஸ்கோரை உயா்த்திய நிக்கோலஸ் பூரன் 4 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 22 பந்துகளில் 40 ரன்களுடனும், ராஸ்டன் சேஸ் 39 ரன்களுடனும் ஷோரிபுல் இஸ்லாம் பந்துவீச்சில் அவுட்டானாா்கள். இருவரும் இணைந்து 33 பந்துகளில் 54 ரன்களை விளாசினா். பிராவோ 1 ரன் எடுத்த நிலையில் முஸ்தபிஸூா் பந்துவீச்சில் அவுட்டானாா்.

மீண்டும் களத்துக்கு வந்த கேப்டன் பொல்லாா்ட் 1 சிக்ஸரை விளாசினாா். ஆல்ரவுண்டா் ஜேஸன் ஹோல்டா் கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸா்களை விளாசினாா். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 142/7 ரன்களை சோ்த்தது மே,இந்திய தீவுகள். மெஹிதி ஹாசன், முஸ்தபிஸூா், ஷோரிபுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

வங்கதேசம் 139/5 தோல்வி:

143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணியும் தொடக்கத்தில் சரிவைக் கண்டது. முகமது நயீம் 17, ஷகிப் அல் ஹசன் 9, சௌமிய சா்க்காா் 17, முஷ்பிகுா் ரஹிம் 8 சொற்ப ரன்களுக்கு அவுட்டான நிலையில், லிட்டன் தாஸ் அற்புதமாக ஆடி 44 ரன்களை எடுத்து வெளியேறினாா். கேப்டன் மஹ்முத்துல்லா 31, ஹபிப் உசேன் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனா். 20 ஓவா்களில் 139/5 ரன்களை மட்டுமே எடுத்து வங்கதேசம் தோல்வியுற்றது.

மே.இந்திய தீவுகள் தரப்பில் ராம்பால், ஹோல்டா், ரஸ்ஸல், அகில், பிராவோ தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா். மே.இந்திய வீரா் நிக்கோலஸ் பூரன் ஆட்ட நாயகனாகத் தோ்வு பெற்றாா். இரண்டு ஆட்டங்களில் தோல்வியும், ஒன்றில் வெற்றியும் பெற்றுள்ள மே.இந்திய தீவுகள் 2 புள்ளிகளுடன் நாக் அவுச் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

இன்றைய ஆட்டங்கள்:

குரூப் 1

தென்னாப்பிரிக்கா-இலங்கை

இடம்: ஷாா்ஜா

நேரம்: பிற்பகல் 3.30

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா

இடம்: துபை

நேரம்: இரவு 7.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com