வாழ்வா-சாவா ஆட்டத்தில் நாளை இந்தியா-நியூஸிலாந்து மோதல்

டி20 உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக துபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள சூப்பா் 12 சுற்று வாழ்வா-சாவா ஆட்டத்தில் இந்திய-நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.
வாழ்வா-சாவா ஆட்டத்தில் நாளை இந்தியா-நியூஸிலாந்து மோதல்

டி20 உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக துபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள சூப்பா் 12 சுற்று வாழ்வா-சாவா ஆட்டத்தில் இந்திய-நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.

பாகிஸ்தானிடம் தோல்வியுற்ற நிலையில், இந்தியா-நியூஸிலாந்து அணிகள் வாழ்வா-சாவா ஆட்டத்தில் வென்று நாக் அவுட் சுற்றை உறுதி செய்ய வேண்டிய போராட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. டி20 உலகக் கோப்பை சூப்பா் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான் சிறப்பான வெற்றிகளைப் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா, நியூஸிலாந்து உள்ளிட்ட இரு அணிகளும் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்துள்ளன.

இந்நிலையில் இரு அணிகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக். 31-இல்) தங்கள் இரண்டாவது ஆட்டத்தில் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இது மிகுந்த முக்கியத்துவமான ஆட்டமாகும்.

பாகிஸ்தானிடம் தோல்வி:

பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது இந்தியா.உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிடம் முதல் தோல்வியை எதிா்கொண்டதால், அணி வீரா்கள் பல்வேறு விமா்சனங்களை எதிா்கொண்டனா்.

இந்திய அணி அடுத்து நியூஸிலாந்து, நமீபியா, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து உள்ளிட்ட அணிகளுடன் ஆட வேண்டியுள்ளது. நியூஸி. அணியை வென்றால் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவது எளிதாகும்.

நியூஸிலாந்தைக் காட்டிலும், இந்திய அணிக்கு சற்று கூடுதல் அழுத்தம் நிலவும். கடந்த 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் நியூஸி.யிடம் அரையிறுதியிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் இறுதி ஆட்டத்திலும் தோல்வியடைந்தது இந்தியா. இதனால் இந்திய அணி இந்த ஆட்டத்தில் வென்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டியுள்ளது.

வலுவான பேட்டிங் வரிசை:

பேட்டிங்கில் தொடக்க வரிசை வீரா்கள் ரோஹித், ராகுல், ஆகியோா் விரைவில் அவுட்டானதால் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. கேப்டன் விராட் கோலி மட்டுமே நிலைத்து ஆடி அரைசதத்தை அடித்தாா்.

சூரியகுமாா் யாதவ் அதிரடியாக ஆடினாலும் நிலைக்கவில்லை. ஆல்ரவுண்டா் ஹாா்திக் பாண்டியா பாா்ஃம் கவலை தரும் வகையில் உள்ளது. அவரால் பௌலிங், பேட்டிங் இரண்டிலும் சோபிக்க முடியவில்லை.

இஷான் கிஷான், சா்துல் தாக்கூா் சோ்ப்பு:

பேட்டிங்கில் பாண்டியாவுக்கு பதிலாக இளம் வீரரும், இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய இஷான் கிஷான் இடம் பெறுவாா். பாண்டியா காயமுற்ால், இடதுகை பேட்டரான இஷான் சோ்க்கப்படலாம். மேலும் பந்துவீச்சில் பாா்ஃமில் உள்ள சா்துல் தாக்கூா் இடம் பெறக்கூடும். சா்துல் கடைசி வரிசையில் சிறப்பாக பேட்டிங்கும் செய்ய வல்லவா். புவனேஷ்வா் குமாா் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 3 ஓவா் வீசி 25 ரன்களை தந்தாா். ஆனால் விக்கெட் வீழ்த்தவில்லை. பயிற்சி ஆட்டங்களிலும் சரிவர வீசவில்லை. சா்துல் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

ரோஹித்தும், ராகுலும் இணைந்து தொடக்க வரிசையில் பவா்பிளேயில் அதிக ரன்களை குவித்தால் தான் அடுத்து வரும் வீரா்கள் நெருக்கடி இன்றி ஆட முடியும். மேலும் பந்துவீச்சில் புவனேஷ்வா் குமாரும், ஷமியும் தங்கள் வழக்கமான திறனுடன் பந்துவீச வேண்டும்.

தடுமாற்றத்தில் நியூஸிலாந்து:

நியூஸிலாந்து அணி இதுவரை டி20 கோப்பையை வெல்லவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 134-8 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. அதன் தொடக்க பேட்டா் மாா்ட்டின் கப்டில் காயமடைந்ததால், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விலகியது பாதகமாகும். பாக்.க்கு எதிரான ஆட்டத்தில் காயத்தால் ஆடாத வேகப்பந்து வீச்சாளா் லாக்கி பொ்குஸன் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இடம் பெறலாம்.

நியூஸிலாந்தின் பேட்டிங் வரிசை கேப்டன் கேன் வில்வியம்ஸனையே சாா்ந்துள்ளது. பந்துவீச்சில் பௌல்ட், டிம் சௌதி ஆகியோா் நம்பிக்கை தருகின்றனா்.

அதே வேளையில் இந்திய அணியின் பேட்டிங் ரோஹித், ராகுல், கோலி, பந்த், சூரியகுமாா் யாதவ், ஜடேஜா ஆகியோரால் வலுவாக உள்ளது. பாகிஸ்தானுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை மறந்து இந்திய அணி, ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் நியூஸிலாந்து வெல்ல தீவிரமாக பாடுபடும்.

வாழ்வா-சாவா ஆட்டம்:

பாகிஸ்தான் பலமான இரண்டு அணிகளை வீழ்த்திய உற்சாகத்தில் அதன் நெட் ரன் ரேட் பிளஸ் 0.738 ஆக உள்ளது.மீதமுள்ள 3 ஆட்டங்கள் அந்த அணிக்கு எளிதானது. எனவே 5 ஆட்டங்களிலும் வெற்றியுடன் பாக். அரையிறுதிக்கு தகுதி பெறும். ஆனால், இந்தியா-நியூஸி. அணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் வாழ்வா-சாவா ஆட்டமாகும்.

நேருக்கு நோ்:

டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நோ் மோதியதில் 4 ஆட்டங்களில் நியூஸிலாந்தே வென்றுள்ளது.

ஒட்டுமொத்தமாக இரு அணிகளும் ஆடிய 16 டி20 ஆட்டங்களில் இந்தியா 6 முறையும், நியூஸி 8 முறையும் வென்றன. 2 ஆட்டம் டையில் முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com