டிக்கெட் வாங்கிக்கொண்டு மைதானத்துக்கு வாங்க: ஆப்கானிஸ்தான் கேப்டன் கோரிக்கை

ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் டிக்கெட்டுகள் வாங்கிக்கொண்டு மைதானத்துக்கு வரவேண்டும்...
ஆப்கானிஸ்தான் ரசிகர்கள்
ஆப்கானிஸ்தான் ரசிகர்கள்

ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் டிக்கெட் வாங்கிக்கொண்டு கிரிக்கெட் ஆட்டம் பார்க்க மைதானத்துக்கு வரவேண்டும் என ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி கோரிக்கை விடுத்துள்ளார். 

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கெனவே இந்தியா, நியூஸி. அணிகளை வென்றுள்ள பாகிஸ்தான் தொடா்ந்து ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. துபையில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. பிறகு பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

12 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்கிற இக்கட்டான நிலைமையில் கரிம் ஜனத் வீசிய 19-வது ஓவரில் 4 சிக்ஸர்கள் அடித்து பாகிஸ்தான் அணிக்கு அற்புதமான வெற்றியை வழங்கினார் 30 வயது ஆசிப் அலி.  7 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த ஆசிப் அலி, ஆட்ட நாயகன் விருதைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் டிக்கெட் வாங்காமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்துக்குள் நுழைய முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து இதுகுறித்து விசாரணை நடத்துமாறு ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்துக்கு ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஆட்டத்துக்கு 16,000 டிக்கெட் விற்கப்பட்டுள்ளது. ஆனால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட் இன்றி மைதானத்துக்கு வந்து உள்ளே நுழைய முயன்றுள்ளார்கள். இதனால் இரவு 7 மணிக்கு மேல் யாரையும் மைதானத்துள் நுழைய மறுத்தது துபை காவல்துறை. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்த வேண்டும் என ஐசிசி உத்தரவிட்டுள்ளது என ஓர் அறிக்கையில் ஐசிசி தெரிவித்துள்ளது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அனைத்து மைதானங்களிலும் 70-80% ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆசிய அணிகள் விளையாடும் ஆட்டங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் திரள்கிறார்கள். 

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஆட்டம் முடிந்த பிறகு ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி கூறியதாவது:

ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் டிக்கெட்டுகள் வாங்கிக்கொண்டு மைதானத்துக்கு வரவேண்டும். இதை மீண்டும் செய்யவேண்டாம். இது சரியல்ல என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com