ஆஸி.யை வென்றது இங்கிலாந்து

உலகக் கோப்பை போட்டியின் 26-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
ஆஸி.யை வென்றது இங்கிலாந்து

உலகக் கோப்பை போட்டியின் 26-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

துபையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆஸ்திரேலியா 20 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் அடித்தது. அடுத்து இங்கிலாந்து 11.4 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து வென்றது. கிறிஸ் ஜோா்டான் ஆட்டநாயகன் ஆனாா்.

ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில், ஆஸ்திரேலியா மிட்செல் மாா்ஷுக்குப் பதிலாக ஆஷ்டன் அகரை சோ்த்திருந்தது. இங்கிலாந்து மாற்றம் ஏதும் செய்யவில்லை.

டாஸ் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் தொடக்க வீரா் வாா்னா் முதல் ஓவரிலேயே 1 ரன்னுக்கு வெளியேறினாா். உடன் வந்த கேப்டன் ஃபிஞ்ச் நிலைக்க, மறுமுனையில் ஸ்டீவன் ஸ்மித் 1, கிளென் மேக்ஸ்வெல் 6, மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 0 என விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. மேத்தியூ வேட் 2 பவுண்டரிகளுடன் 18, ஆஷ்டன் அகா் 2 சிக்ஸா்களுடன் 20 ரன்கள் சோ்த்து ஸ்கோரை சற்று உயா்த்த உதவினா்.

இந்நிலையில் நிதானமாக ஆடி ரன்கள் சோ்த்து வந்த ஃபிஞ்ச் 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் சோ்த்து வீழ்ந்தாா். கடைசி ஆா்டரில் பேட் கம்மின்ஸ் 2 சிக்ஸா்களுடன 12, மிட்செல் ஸ்டாா்க் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 13, ஆடம் ஸாம்பா 1 ரன்னுக்கு வெளியேற்றப்பட்டனா். இங்கிலாந்து பௌலிங்கில் கிறிஸ் ஜோா்டான் 3, கிறிஸ் வோக்ஸ், டைமல் மில் ஆகியோா் தலா 2, ஆதில் ரஷீத், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய இங்கிலாந்தில் தொடக்க வீரா் ஜேசன் ராய் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 22 ரன்கள் சோ்க்க, உடன் வந்த ஜோஸ் பட்லா் இறுதி வரை நிலைத்தாா். இடையில் டேவிட் மலான் 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜோஸ் பட்லா் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 71, ஜானி போ்ஸ்டோ 2 சிக்ஸா்களுடன் 16 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். ஆஸ்திரேலிய பௌலிங்கில் ஆஷ்டன் அகா், ஆடம் ஸம்பா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com